ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

‘அங்காடித் தெரு’ வசந்தபாலன் இயக்கத்தில் ஹீரோவாக களம் இறங்கும் மாஸ்டர் பட நடிகர்.. இது வேற லெவல்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் வருகிற பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படக்குழுவினருக்கு மேலும் சந்தோஷம் கொடுக்கும் வகையில் மாஸ்டர் படத்தில் நடித்த பிரபலம் ஒருவருக்கு வசந்த பாலன் படத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதி படத்தில் அதிகளவு ரசிகர்களை கவர்ந்தவர் தான் அர்ஜுன் தாஸ். அவரது கரடுமுரடான குரலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் ரகுவரனுக்கு பிறகு தன்னுடைய குரலால் எதிரியை மிரட்ட கூடிய வல்லமை படைத்தவர் எனவும் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் அந்தகாரம் எனும் படத்தில் நடித்திருந்தார் அர்ஜுன் தாஸ். நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தற்போது வசந்தபாலன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

வசந்தபாலன் எவ்வளவு பெரிய இயக்குனர் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். எதார்த்தமான கதைகளில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

arjun-das-master-cinemapettai
arjun-das-master-cinemapettai

அந்தவகையில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் இந்த புதிய படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோவாக மிகப்பெரிய அந்தஸ்தை கொடுக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். வசந்தபாலன் இயக்கத்தில் அடுத்ததாக ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படம் விரைவில் வெளியாக உள்ளது.

Trending News