வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சத்தமில்லாமல் வலிமை படப்பிடிப்பை முடித்த மாஸ்டர் பட நடிகை.. வேற லெவல் போங்க!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மாஸ்டர். கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூலில் எந்த ஒரு குறையும் இல்லை.

மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மகேந்திரன் ஆகியோரது நடிப்பு பலரையும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி இந்திய அளவில் மாஸ்டர் படத்தால் பிரபலமாகி விட்டார். தற்போது விஜய் சேதுபதியுடன் படம் நடிக்க இந்திய சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களும் போட்டி போட்டுக் கொள்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க சத்தமில்லாமல் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் செம பிரபலமாகிவிட்டார் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த சங்கீதா. மாஸ்டர் படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் மருத்துவராக சங்கீதா சில நிமிடங்கள் நடித்திருப்பார்.

அதுவே ரசிகர்களுக்கு பிடித்து விட்டது போல. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சங்கீதாவின் அக்கவுண்டை தேடிப்பிடித்து மெசேஜ் மேல் மெசேஜ் அனுப்பி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க தல ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக சங்கீதா வலிமை படத்தில் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

sangeetha-master-doctor-cinemapettai
sangeetha-master-doctor-cinemapettai

மேலும் நீண்ட நாட்களாக வலிமை படத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார் தல ரசிகர்களுக்கு ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். வலிமை படம் 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாம்.

ஆனால் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு போல வலிமை படத்தில் அஜித்துடன் நடிக்க கிடைக்கவில்லையாம். ஆனால் வினோத் தனக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வலிமை படத்திற்குப் பிறகு இளம் ரசிகர்கள் மத்தியில் சங்கீதா ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்துவார் என நம்பலாம்.

Trending News