ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிக் பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்கிறாரா மாஸ்டர் மகேந்திரன்.? அவரே கூறிய பதில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்  நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதன் விளைவாக இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து, 5வது சீசன் வரும் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் நிறைவடையவுள்ளது.

எனவே பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ மற்றும் இந்த சீசனுக்கான லோகோ முதலியவற்றை விஜய் டிவி நிர்வாகம் நேற்று முன்தினம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தது.

மேலும் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் கசிகிறது. அந்தவகையில் இயக்குனரும் நடிகையுமான லஷ்மி ராமகிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சீரியல் நடிகை பவானி ரெட்டி இவர்களின் வரிசையில், தற்போது மாஸ்டர் படத்தில் நடித்த குட்டி பவானி ‘மகேந்திரன்’ பிக்பாஸ் வீட்டில் நுழையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் மகேந்திரனிடம், ‘நீங்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போகிறீர்களா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு மகேந்திரன், ‘வாழ்க்கையே ஒரு பிக்பாஸ் தானே’ என்று பதில் அளித்துள்ளார்.

பொதுவாக பிக்பாஸ் போட்டிக்குள் நுழைவதற்கு முன்பு யாரும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போகிறேன் என்பதை முன்கூட்டியே சொல்வதில்லை. ஏனென்றால் அதுவே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை அளிக்கிறது.

master mahendran
master mahendran

இன்னும் ஒருசில தினங்களில் பிக்பாஸ் சீசன்5 போட்டியில் யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்பது பற்றிய முழு விவரத்தையும் விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News