வியாழக்கிழமை, மார்ச் 13, 2025

மாஸ்டர் ஒரு கேம் சேஞ்சர்.. விஜய் படத்தை புகழ்ந்து தள்ளிய சூர்யா பட வினியோகஸ்தர்

மாஸ்டர் படத்தின் திரையரங்கு வெளியீட்டை சூர்யாவின் நெருங்கிய உறவினரும் வினியோகஸ்தரும் புகழ்ந்து பாராட்டியுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பெரும்பாலும் சூர்யா சம்பந்தப்பட்ட உறவினர்கள் யாரும் மற்ற நடிகர்களைப் பற்றி பேசமாட்டார்கள்.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை குவித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது திரையரங்கு உரிமையாளர்கள் கொண்டாடும் வகையிலேயே தெரியவருகிறது.

மாஸ்டர் படம் கடந்து 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவர வேண்டியது. ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் படத்தின் வெளியீடு தள்ளிக் சென்றது. இதற்கிடையில் பல முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் OTT தளங்களில் வெளியிட்டாலும் விஜய் விடாப்படியாக தியேட்டரில்தான் வெளியிடுவேன் என ஒற்றைக்காலில் நின்றார்.

அதற்கான பலனும் கிடைத்து விட்டது. எந்த ஒரு போட்டியும் இல்லாமல் அசால்டாக வெற்றி பெற்றுவிட்டார். தியேட்டர்காரர்கள் விஜய்யை தற்போது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் சூர்யாவின் மீது கொஞ்சம் வஞ்சம் வைத்துள்ளனர் என்பதும் தெரிகிறது.

அதற்கு காரணம் சூர்யாவின் சூரரைப்போற்று படமும் மாஸ்டர் படத்துடன் நேருக்கு நேர் மோதவிருந்தது. படத்தின் தயாரிப்பாளர் சூர்யா தியேட்டர் வெளியீடு வரை வெயிட் செய்யாமல் சூரரைப் போற்று படத்தை நேரடியாக அமேசான் தளத்தில் வெளியிட்டு நல்ல லாபம் பார்த்தார்.

இதனால் ரசிகர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வரும் சூரரைப் போற்று படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிட்டதால் சூர்யாவுக்கு எதிர்மறை கருத்துக்களை வெளியானது.

ஆனால் அதை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனரும் சூர்யாவின் உறவினருமான சக்தி வேலன் என்பவர் சமீபத்திய படவிழா ஒன்றில் மாஸ்டர் படம் தமிழ் சினிமாவின் கேம் சேஞ்சர் என புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலை அலையாக மாஸ்டர் படத்தை பார்க்க வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

master-the-blaster-cinemapettai
master-the-blaster-cinemapettai

Trending News