ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

மாஸ்டர் பட ஹிந்தி ரீமேக்கை இயக்குபவர் இவர்தான்! அட, இவரு நம்ம ஊரு ஹீரோவாச்சே!

கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மாஸ்டர். விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி 100 கோடி வசூலை குவித்த திரைப்படம்.

அதுமட்டுமில்லாமல் இந்திய சினிமாவுக்கே வெளிச்சம் கொடுத்த படமாகவும் மாஸ்டர் படம் கருதப்படுகிறது. அதுவரை பல முன்னணி நடிகர்களின் படங்கள் தியேட்டரில் வெளியாக தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் விஜய் படம் வெளியாகி வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்கள் தியேட்டர்களில் வெளியாகின.

மாஸ்டர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விஜய் மற்றும் விஜய்சேதுபதியின் கதாபாத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மாஸ்டர் படம் நேரடியாக அனைத்து மொழிகளிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

master-01
master-01

மாஸ்டர் படம் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளில் வெளியாகி இருந்தாலும் மற்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்கள் மாஸ்டர் படத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து ரீமேக் செய்ய ஆர்வமாக உள்ளனர்.

அந்த வகையில் தற்போது இந்தியில் மாஸ்டர் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கும் முன்னணி நடிகர் சல்மான் கான் சமீபத்தில் மாஸ்டர் படத்தை பார்த்த சல்மான் கான் எப்படியாவது ரீமேக் செய்தே ஆகவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்.

salmankhan-prabhudeva
salmankhan-prabhudeva

அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை இயக்கப் போவது நம்ம ஊரு ஹீரோ பிரபுதேவா தான். ஏற்கனவே விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட்டான போக்கிரி படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானை வைத்து வான்டட் என ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News