செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர்.. விஜய், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்கள்

பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் இதுவரை விஜய் என் சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு வித்தியாசமான திரைப்படம் அமைந்ததே இல்லை எனும் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து வசூலில் மிரட்டி வருகிறது. என்னதான் 50 சதவீத பார்வையாளர்கள் இருந்தாலும் வசூல் நினைத்ததை விட அதிகமாக வருவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இடத்தில் உருவாகிய மாநகரம் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களும் தற்போது ரீமேகாகி கொண்டிருக்கின்றன.

master-poster

மாநகரம் படம் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கைது இப்படத்தில் பாலிவுட் பிரபல நடிகர் அஜய் தேவ்கான் நடிக்க உள்ளார் என்பதும் அறிந்த தகவல் தான்.

தற்போது மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் மற்றும் ஜேடி என்ற விஜய் கதாபாத்திரத்தில் சாருக் கான் ஆகிய இருவரும் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம். மாஸ்டர் படம் வெளியான முதல் நாளில் வேண்டுமென்றே சிலர் படம் தோல்வியடைந்து விட்டதாக சமூகவலைதளத்தில் பரப்பிவிட்டனர்.

ஆனால் அனைத்து இன்னல்களையும் தாண்டி தற்போது மாஸ்டர் படம் வசூலில் சரித்திர சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. தியேட்டரில் பாதிக்கு பாதி மக்களை வைத்துக்கொண்டு பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிய ஒரு மாஸ்டர் படத்தை பார்த்து அனைவரும் மிரண்டு போய் உள்ளனராம்.

முதல் நாளே தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விட்டதாக மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

Trending News