தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய மாஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்த நிலையில் படம் இணையதளத்தில் வெளியானது படக் குழுவினர் மற்றும் தளபதி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமே மாஸ்டர் படம் வெளியாக வேண்டியது. ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் படம் வெளியாகாமல் தடுமாறி தற்போது ஒரு வழியாக ஜனவரி 13-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு மாஸ்டர் படத்தின் டிக்கெட்டுகள் இந்தியா முழுவதும் விற்பனையாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த சூழ்நிலையில் மாஸ்டர் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய்யின் தலைவா படமும் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. என்னதான் பொத்திப் பொத்தி பாதுகாத்து வைத்தாலும் சிலர் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சமீபத்தில் கூட பல கோடி பொருட்செலவில் உருவான கேஜிஎஃப் படத்தின் டீஸர் இணையத்தில் லீக்கானது. இதனை மற்ற நடிகர்களின் ரசிகர்களும் ஆதரிப்பதுதான் வேதனையாக இருக்கிறது என்கிறார்கள் சினிமா வாசிகள்.
இருந்தாலும் படக்குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட பைரசி தளங்களை முடுக்கி விட்டதாக தெரிகிறது. மேலும் மாஸ்டர் படத்தின் லீக்கான காட்சிகள் மற்றும் போஸ்டர்கள் ஆகியவற்றை இணையத்தில் பகிர வேண்டாம் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் நடிகர் நடிகைகள் வரை அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஒருவழியாக இன்று காலை படம் வெளியாகி ஒரு ஆறுதலாக இருந்தாலும் இணையத்தில் இப்படி லீக்கானது இனிவரும் பெரிய நடிகர்களின் படக்குழுவினருக்கும் பயத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.