ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

முழு ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுக்கும் மாஸ்டர் மகேந்திரன்.. வைரலாகும் டைட்டில் போஸ்டர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மாஸ்டர் மகேந்திரன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தற்போது இயக்குனர்கள் மகேந்திரன் வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

இவர் விஜய், அஜித், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் படங்களிலும் சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார். தற்போது இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன இருப்பினும் இவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதிலும் குறிப்பாக மாஸ்டர் மகேந்திரன் நடிப்பு ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மகேந்திரன் தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக கதைகளை மட்டுமே கேட்டு அதில் தனது கதாபாத்திரம் சிறப்பாக இருந்தால் மட்டுமே நடித்து வருகிறார்.

arrtham
arrtham

தற்போது மாஸ்டர் மகேந்திரன் அர்த்தம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரத்த கலவையில் படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டிற்காக போராடிய வீரர்களின் கதையாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Trending News