ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மாஸ்டரில் மிரட்டிய குட்டி பவானி.. நீ தான் நடிக்கணும் என கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் நிறைய பேருக்கு சினிமாவில் மீண்டும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் சில நடிகர்களின் மார்க்கெட்டையும் உச்சத்திற்கு கொண்டுசென்றுள்ளது.

விஜய் நடித்த JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது அனைவருக்கும் உண்மைதான். ஆனால் விஜய் சேதுபதியை விட அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் என்றால் அது மாஸ்டர் மகேந்திரன் தான்.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்த மாஸ்டர் மகேந்திரனுக்கு இளமை காலங்களில் சரியாக ஒரு படம் அமையாததால் தொடர்ந்து சினிமாவில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கூப்பிட்டு மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது மாஸ்டர் மகேந்திரனுக்கு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகிறதாம்.

அந்தவகையில் அடுத்ததாக தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் D43 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் மாஸ்டர் மகேந்திரன்.

master-mahendran-joins-D43
master-mahendran-joins-D43

இதற்கான புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதேபோல்தான் விஜய்சேதுபதியின் மார்க்கெட்டும் மாஸ்டர் படத்திற்கு பிறகு உச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News