திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதியிடம் கெஞ்சி கேட்ட மாஸ்டர் மகேந்திரன்.. ரசிகனுக்காக செவி சாய்ப்பாரா விஜய்?

தளபதி விஜய்க்கு கோடான கோடி ரசிகர்கள் இருந்த வருகிறார்கள். இதனால் தான் விஜய்யின் படங்கள் வசூலில் எப்போதுமே புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவு பெற்றது.

அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் தான் நடத்த வேண்டும் என விஜய்யை விரும்பினார். அதற்கான வேலையும் தொடங்கப்பட்டது. ஆனால் விஜய் ரசிகர்களால் சென்னையில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. ஏனென்றால் விஜய்யை பார்க்க படப்பிடிப்பு தளத்தில் அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

Also Read : மார்க் ஆண்டனி டீசர் எல்லாம் ஒரு மேட்டரே இல்லையாம்.. விஷால் விஜய்யுடன் திடீரென்று ஒட்டிக்கொண்ட காரணம் இதுதான்

இதனால் திணறிய லோகேஷ் லியோ படத்தை ஹைதராபாத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார். இப்படி ஒவ்வொரு முறையும் விஜய்யின் அதீத ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்கிறார்கள். அப்படி விஜய்யின் தீவிர ரசிகரான ஒருவர் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பி உள்ளார்.

அதாவது குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் இப்போது கதாநாயகனாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருந்தார். இந்நிலையை மகேந்திரன் அடிக்கடி பெட்ரோல் போட செல்லும் பங்கில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் இருக்கிறார்.

Also Read : 14 வருடத்திற்கு முன்பே விஜய், சூர்யாவிற்கு மணிரத்னம் கொடுத்த ஆஃபர்.. தட்டிக் கழித்து வருந்தும் 10 பிரபலங்கள்

இந்நிலையில் சமீபத்தில் மகேந்திரன் அந்த பெட்ரோல் பங்குக்கு செல்லும்போது தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அப்போது விஜய்யை ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று அந்த மாற்றுத்திறனாளி ரசிகர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து விஜய் அவரை நேரில் சந்திக்க அழைப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Big-Fan-Of-Vijay

Also Read : விஜய்யிடம் பேசி தந்திரமாக காய் நகர்த்தும் சங்கத்து ஹீரோ.. ஆசைப்பட்டதை நிறைவேற்றாமல் விடமாட்டாரு போல

Trending News