ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குட்டி பவானிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இந்த மாஸ் ஹீரோவுக்கு வில்லன் ஆகிறார்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் முதன்முறையாக இணைந்துள்ள படம் டி43. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவுபெற உள்ளதாக கூறப்பட்டுகிறது. இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங்கில் மாஸ்டர் மகேந்திரன் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் இவர் தற்போது டி43 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்திலும் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியான பின்னர் மாஸ்டர் படத்தை போலவே சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிவரும் டி43 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

master-bhavani
master-bhavani

Trending News