செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மாஸ்டர் திரை விமர்சனம்.. விஜய்யை காலி செய்தாரா விஜய் சேதுபதி?

மாஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை அதன் முதல் போஸ்டரிலேயே வெளிப்படுத்தி விட்டார் லோகேஷ் கனகராஜ். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா மாஸ்டர் படம் என்பதை இப்பொழுது பார்க்கலாம். அதிலும் மாஸ்டர் விஜய் படமா? அல்லது விஜய்சேதுபதி படமா? என்பதில் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்.

மாஸ் ஹீரோக்களுக்கு முக்கியமே அவர்களின் அறிமுக காட்சிதான். அதுவும் விஜய், அஜித் படம் என்றால் ரஜினிக்கு அப்புறம் திரையரங்குகளில் ஒரு அதிர்வை ஏற்படுத்துவது இவர்கள் இரண்டு பேர்தான். இந்த விஷயத்தில் விஜய்யின் அறிமுக காட்சியே மிக நீளமாக இருக்கும் அதனால்தான் ரசிகர்களின் கைத்தட்டல்களை வைத்து அதிர வைத்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

அதேதான் விஜய் சேதுபதிக்கும் அவருக்கும் தேவையான பில்டப் கொடுத்து அறிமுகக் காட்சியை வைத்துவிட்டார். அனிருத்தின் இசை அற்புதமாக இருந்தது. விஜய், விஜய் சேதுபதி இவர்களின் நடிப்பும் வழக்கம்போல பிரமாதம் ஆனால் விஜய்யை காலி செய்த விஜய் சேதுபதி என்ற டைட்டில் எதற்கு என்று சொல்லித்தான் ஆகவேண்டும். விஜய் சேதுபதி வரும் அனைத்து காட்சிகளும் அறிமுகக் காட்சிபோல நன்றாகவே இருந்தது. ஆனால் விஜய்க்கு அது மிஸ்ஸிங்.

சிறுவர் சீர்திருத்த பள்ளயில் ஆசிரியராக இருக்கும் விஜய் அங்கு சிறுவர்களுக்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு பவானிதான் (விஜய் சேதுபதி) காரணம் என்று கண்டுபிடித்து அவரை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் கதை. சிறுகதைதான் ஆனால் திரைக்கதையில் உள்ள ஓட்டைகள்தான் மாஸ்டர் படத்திற்கு பிரச்சினையே. அனிருதும் அவருடைய இசையை வைத்து எவ்வளவு நேரம்தான் தாங்குவார்.

சாந்தனு, ஆண்ட்ரியா போன்றவர்கள் படத்திற்கு தேவையே இல்லாத கதாபாத்திரங்கள் வெறும் மார்க்கெட்டிங்காக அவர்களை பயன்படுத்துவது போல் தான் இருந்தது. மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாதி மிக நீளமாக போய்க்கொண்டே இருக்கிறது.

விஜய் சேதுபதி இப்படி ஒரு முரட்டு வில்லனாக நடிப்பார் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். விஜய் சேதுபதி பேசும் வசனங்களும் அவருடைய காட்சி அமைப்பையும் பார்த்தால் அவருக்கு சற்று அதிகமாகக் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்காக கண்டிப்பாக ஒரு முறை மட்டும்தான் பார்க்க முடியும். அதற்கு மேல் விஜய் ரசிகராக இருந்தாலும் பார்க்க முடியாது.

Rating: 2.5/5

Trending News