செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

இவ்வளவு நெருக்கடியிலும் மாஸ்டர் படத்திற்கு சம்பளத்தை குறைக்காத தளபதி.. தயாரிப்பாளர் பிரிட்டோவின் விளக்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்துள்ளது மாஸ்டர். இந்த படம் கிட்டத்தட்ட 250 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாம்.

தளபதி ரசிகர்களை தாண்டி கலவையான விமர்சனங்களை பெற்றது மாஸ்டர். இந்த படத்தில் நடிக்கும் போது தளபதி விஜய் பல பிரச்சனைகளை சந்தித்தார். தளபதியின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது, இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்காக கிட்டத்தட்ட 80 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார். கொரோனா காலகட்டத்தில் படம் வெளிவராததால் சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா தளபதி என்ற கேள்வியை தயாரிப்பாளர்களிடம் கேட்டுள்ளனர்.

lokeshkanagaraj-master
lokeshkanagaraj-master

அப்போது தயாரிப்பாளர் மற்றும் தளபதியின் நெருங்கிய உறவினார் சேவியர் பிரிட்டோ கூறுகையில் ஒரு பொருளுக்கும் பிராண்டிங் தகுந்தாற்போல் பண மதிப்பு உண்டு. அதாவது வெள்ளி, தங்கம், வைரம் என்று எடுத்துக்கொண்டால் மதிப்பிற்கேற்ப விலையில் மாற்றங்கள் இருக்கும்.

அதேபோல் தான் தளபதி விஜய் உழைப்புக்கும், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் புகழுக்கு, மரியாதைக்கும் அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் சரியானது தான். அவர் கேட்ட சம்பளத்தை கொடுப்பது தான் மரியாதையும் .

சினிமாத்துறையில் கோடிக்கணக்கான ரசிகர்களை குவித்து வைத்துள்ள தளபதி விஜய் தற்போதைய மார்க்கெட் என்னவோ அதைத்தான் நாங்களும் செஞ்சிருக்கோம் என்பது போன்ற தெரிவித்துள்ளார்.

இதைத் தாண்டி விஜய்சேதுபதி 10 கோடி, அனிருத்துக்கு 3.5 கோடி மற்றும் லோகேஷ் கனகராஜ்க்கு 2 கோடி வரை சம்பளம் கொடுக்கப் பட்டுள்ளது. எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக தளபதி மாஸ்டர் சாதித்து விட்டார் என்பது தான் உண்மை.

- Advertisement -spot_img

Trending News