புதன்கிழமை, ஜனவரி 8, 2025

தெலுங்கில் மாஸ்டரின் நிலை என்ன? அதிர்ந்துபோய் தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு

50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மாஸ்டர் படம் வசூலை வாரி குவித்துள்ளது மற்ற நடிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 100% பார்வையாளரை வைத்துக்கொண்டு ஓபனிங் கிடைக்காமல் தடுமாறும் நடிகர்களுக்கு மத்தியில் வெறும் 50% பார்வையாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு முதல் நாளே 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக மாஸ்டர் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து மாஸ்டர் படம் வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் செம லாபம் கிடைத்துள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில் தெலுங்கில் மாஸ்டரின் நிலை என்ன ஆனது என்ற கேள்வியும் வெளியாகியுள்ளது.

முன்னதாக தெலுங்கில் விஜய்க்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை என பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர். ஆனால் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் பிகில் போன்ற படங்களின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் தனக்கென ஒரு குறிப்பிட்ட மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொண்டார்.

தற்போது மாஸ்டர் படம் அதையும் மீறி முதல் நாளே பத்து கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளதாம். முதல் நாளில் போட்ட பணத்தில் முக்கால்வாசியை கைப்பற்றி விட்டதாக பெருமையாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தை தெலுங்கில் வெளியிட ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்சன்ஸ் நிறுவன உரிமையாளர் மகேஷ் போனாரு தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு நடிகர்களின் நேரடி படங்கள் வெளியான போதும் விஜய்யின் மாஸ்டர் படம் மிகப்பெரிய வசூலைக் குவித்துள்ளது அங்குள்ள நடிகர்களை கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம். ஆந்திராவிலும் அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவிகித பார்வையாளர்கள்தான் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதும் கூடுதல் தகவல்.

ஏற்கனவே கேரளாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களை விட ஓபனிங் கலெக்ஷன் எப்போதுமே தளபதி விஜய் தான் அதிகம் என்பதை அவர்களே பல இடங்களில் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது அதே போல் தெலுங்கு சினிமாவிலும் படத்திற்கு படம் தன்னுடைய மார்க்கெட் பல மடங்கு உயர்த்திக் கெத்து காட்டிக் கொண்டிருக்கிறார் தளபதி விஜய்.

vijay-master
vijay-master

Trending News