விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த வருடம் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரானா தொற்று காரணமாக திரையரங்குகள் எதுவும் செயல்படாததால் படத்தை வெளியிடாமல் வைத்திருந்தனர் படக்குழுவினர்.
ஆனால் வருகிற பொங்கலுக்கு முந்தின நாள் 13ம் தேதியில் திரையரங்களில் மாஸ்டர் படம் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதுமட்டுமில்லாமல் தியேட்டர்களில் 100% இருக்கையுடன் வெளியாகவும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தனர்.
இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தியேட்டர் பணியாளர்கள் பல மாதங்கள் கழித்து திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் படம் வெளியாவதால் சந்தோசத்தில் இருந்தனர்.
ஆனால் இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் கொரானா என்பது ஒரு கொடிய நோய், மூடப்பட்டு இருக்கும் அறையில் அதன் வீரியம் அதிகமாக இருக்கும், அது மட்டுமில்லாமல் 3 மணி நேரம் இடைவெளி இல்லாமல் இருப்பது மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தியேட்டர்களில் 100% இருக்கைகள்ளுடன் படங்கள் வெளியாவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் மாஸ்டர் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.
மேலும் படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் படக்குழுவினர் மீண்டும் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாஸ்டரை நம்பி அடுத்தடுத்து திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கின்ற படங்களின் நிலைமையும் அடிவாங்க உள்ளதாம். இப்படி மத்திய மாநில அரசுகள் தடை விதித்தால் சினிமா துறையை சேர்ந்த அனைவருமே பாதிக்கப்படுவார்கள். உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.