செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மாஸ்டருக்கு இப்படி விமர்சனம் வரும்னு எதிர் பார்க்கல.. நொந்துபோன லோகேஷ் கனகராஜ்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மாஸ்டர் படத்திற்கு விமர்சனங்கள் கலவையாக வந்ததால் வருத்தத்தில் இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். விஜய் மீது வெறுப்பில் இருப்பவர்கள் மாஸ்டர் படத்தைப் பற்றிய தவறான விமர்சனங்களை கிளப்பி விட்டு விட்டார்களோ எனவும் கவலையில் உள்ளாராம்.

தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். படத்திற்கு படம் வெரைட்டியான திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த மாநகரம் மற்றும் கைது இரண்டு படங்களும் செம ஹிட் அடித்தது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கினார். மேலும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். படம் வெளியான முதல் நாளே மாஸ்டர் படம் தோல்வியடைந்ததாக சமூகவலைதளத்தில் வெகு வேகமாகப் பரப்பி விட்டனர்.

இதனால் மாஸ்டர் படக்குழு அதிர்ச்சியில் இருந்ததாம். பொதுவாக மாஸ்டர் படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் பாதி அருமை எனவும் இரண்டாம் பாதி ஜவ்வு போல் இருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது அதைப்பற்றி முதல்முறையாக லோகேஷ் கனகராஜ் என்ன வாய் திறந்துள்ளார்.

அவர் கூறியதாவது, ஒரு படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் எனவும் படத்தின் நீளம் அதிகமாக இருக்க இரண்டு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். இனி அடுத்தடுத்த படங்களில் இந்த தவறுகளை செய்யமாட்டேன் எனவும் ரசிகர்களுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இருந்தாலும் விஜய் படங்களுக்கு வசூல் ரீதியாக எந்த ஒரு குறையும் இருக்காது என்பது மாஸ்டர் படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படையெடுத்து வருவதை சமூகவலைதளங்களில் பார்த்து வருகிறோம். தற்போது விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தளபதி 66 படத்தில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக ஒரு பக்கம் செய்திகளை கிளப்பி விட்டுள்ளனர்.

Trending News