சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தமிழகத்தில் மாஸ்டர் தெறிக்கவிட்டாலும் அந்த ஏரியால தலையில் துண்டை போட்டாசாம்.. அதிர்ச்சியில் தளபதி ரசிகர்கள்!

தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலேயே பெரிய மவுசு கொண்ட நடிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தளபதியின் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம், அவருடைய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்தப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ரிலீசாகி பட்டையை கிளப்பியது.

அதுமட்டுமில்லாமல் கடந்த வார நிலவரப்படி, மாஸ்டர் திரைப்படம் ஹாலிவுட்டை பின்னுக்குத்தள்ளி உலக அளவில் கலெக்சனில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் வெற்றி பெற்றாலும், இரண்டு இடங்களில் மட்டும் சறுக்கி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

master-poster-1
master-cinemapettai

அதாவது தென்னிந்தியாவில் மாஸ்டர் திரைப்படம் பெரும் சாதனையை புரிந்து தியேட்டர் ஓனர்களை மகிழ்ச்சி கடலில் நீந்த செய்தது. ஆனால் மாஸ்டர் திரைப்படம் வட இந்தியாவிலும், ஓவர்சீஸ் கலெக்சனிலும் பெரும் அடிவாங்கி விட்டதாம்.

ஏனென்றால் வட இந்தியாவில் மாஸ்டர் படம் 2 கோடி தான் வசூல் செய்ததாம். அதேபோல் ஓவர்சீஸ்-லும் வெறும் 36 கோடி தான் வசூல் செய்ததாம்.

மேலும் இந்த தகவல் விஜய் பாலிவுட்டிலும் பளிச்சென்று மின்னுவார் என்று எண்ணிய விஜய் ரசிகர்கள் பலரை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

Trending News