எந்த ஒரு தமிழ் நடிகரும் செய்யாத சிறப்பான சாதனையை தளபதி விஜய் செய்துள்ளது அவர் மீதான மரியாதையை கோலிவுட் வட்டாரங்களில் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக தியேட்டர் வட்டாரங்களில் தளபதி விஜய்யை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு வரை குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருவார்களா என அனைவருக்குமே சந்தேகம் இருந்தது. ஆனால் விஜய் படம் வெளியானால் குடும்பம் குடும்பமாகத் தான் வருவோம் என மக்கள் செய்து காட்டி விட்டனர். இதனால் மாஸ்டர் படத்தின் வசூல் 50 சதவிகித பார்வையாளர்களை மட்டும் வைத்துக்கொண்டே பிரம்மாண்ட சாதனை செய்து வருகிறது.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் திரைப்படம் எட்டு நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி வசூலை தாண்டி விட்டதாம். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து 4-வது முறையாக விஜய் படம் 200 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. முன்னதாக மெர்சல், சர்கார், பிகில் போன்ற படங்கள் 200 கோடிகளுக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. மேலும் ஒரு சாதனையாக விஜய் படம் நான்காவது முறையாக தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூலைத் கொட்டிக் குவித்துள்ளது.

உலகம் முழுவதுமே எந்த தியேட்டரிலும் 100 சதவீத பார்வையாளர்கள் முழுவதுமாக அனுமதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் வெறும் எட்டே நாட்களில் 200 கோடி வசூல் சாதனை செய்துள்ள மாஸ்டர் படத்தை பார்த்து மொத்த இந்திய சினிமாவே அதிர்ந்துபோய் உள்ளதாம்.
நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் விஜய்யின் மார்க்கெட்டும், ரசிகர் பட்டாளமும் அதிகரித்து வருவதை மாஸ்டர் படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என கோலிவுட்டில் மார்தட்டிக் கொள்கின்றனர்.