திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தூக்கிட்டு வாங்க அந்த செல்லத்தை.. ஜெயிலரில் வாய்ப்பு வாங்கிய மாவீரன் பட நடிகர்

Actor Rajini: கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஜெயிலரின் அலப்பறையாக தான் இருக்கிறது. காவாலா பாடலில் ஆரம்பித்து தலைவரின் அலப்பறை, இசை வெளியீட்டு விழா என ஒவ்வொன்றுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே வந்தது.

அந்த வகையில் இன்று ஆரவாரத்தோடு வெளியாகி இருக்கும் ஜெயிலர் திரும்பும் பக்கம் எல்லாம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து கொண்டிருக்கிறது. படத்தில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பு வேற லெவலில் இருந்தாலும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கான வேலையை சிறப்பாக செய்து ஸ்கோர் செய்திருக்கின்றனர்.

Also read: தட்டு தடுமாறி 100 கோடி வசூலை தொட முடியாத மாவீரன் சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த ரிப்போர்ட்

அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் சுனிலும் இப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். அதிலும் ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே இவர் பேசும் ஒரு வசனம் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது தன்னை சந்திக்க வந்த சிபிஐ ஆபிஸரிடம் இவர் டொனேஷன் ஏதாவது வேண்டுமா என்று கேட்பார்.

ரகளையாக இருந்த அந்த வசனமே அவருடைய கேரக்டரை எடுத்துச் சொல்கிறது. அந்த வகையில் இப்படத்தில் சுனில் நடிக்க வந்ததே ஒரு சுவாரஸ்யம் தான். அதாவது ரஜினியின் குசேலன் தெலுங்கில் வெளியான போது வடிவேலு நடித்திருந்த கேரக்டரில் தான் சுனில் நடித்திருந்தார்.

Also read: மாலத்தீவில் நடக்காதது ஜெயிலர் ரிலீஸில் நடந்து விட்டதே.. தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைத்த முத்துவேல் பாண்டியன்

அதில் இம்ப்ரஸ் ஆன சூப்பர் ஸ்டார் அவரை கூப்பிட்டு பாராட்டி இருக்கிறார். அதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்திலும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதற்கு முன்னதாக சுனில் மாவீரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

அதாவது வில்லனாக இருக்கும் மிஷ்கினுக்கே ஆர்டர் போடும் நண்பராக அவருடைய கதாபாத்திரம் இருக்கும். மிகவும் ரசிக்க தக்க வகையில் இருந்த அந்த கேரக்டரை தொடர்ந்து தற்போது ஜெயிலரிலும் அவர் கவனம் பெற்று இருக்கிறார். இவ்வாறாக ரஜினியை இம்ப்ரஸ் செய்து வாய்ப்பு வாங்கிய சுனில் அடுத்தடுத்த தமிழ் படங்களில் இடம்பெறவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also read: கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய நெல்சன்.. ஜெயிலர் படத்தில் இருக்கும் நிறை, குறைகள்

Trending News