வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

குருநாதா நீங்க இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை போட்ட பதிவால் ஆடிப் போன மாவீரன் தயாரிப்பாளர்

 Blue Sattai Maran:  சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் பெரிய நடிகர்கள் முதல் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் நக்கல் அடித்து பதிவு போட்டு வருகிறார். விஜய், அஜித், தனுஷ் என்று எல்லோருமே இவரது வாயிலிருந்து தப்பியதில்லை. அதுமட்டுமின்றி தனது யூடியூப் வாயிலாக படங்களை விமர்சனம் செய்து வருகிறார்.

இப்படி இருக்கும் சூழலில் ரசிகர்கள் இவருடைய விமர்சனத்தை பார்த்து விட்டுதான் திரையரங்குக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இவருக்கு தமிழ் சினிமாவில் மவுசு இருக்கிறது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் போட்ட ஒரு பதிவால் தயாரிப்பாளர் ஆடிப் போய்விட்டார்.

Also Read : சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, ரஜினியே தான்.. மிஷ்கின் பேச்சுக்கு ப்ளூ சட்டை பதில்

அதாவது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் ஆகியோர் நடிப்பில் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி மாவீரன் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அருண் விஷ்வா தயாரித்துள்ளார். இந்த படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஷன் இம்பாஸிபிள் 7 படம் வெளியாகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸ் இன் முந்தைய மிஷன் இம்பாஸிபிள் பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இப்போது வெளியாக உள்ள படத்தின் டிரைலரும் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது. இந்தப் படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : மாமன்னன் வசூலுக்காக உதயநிதி செய்த தந்திரம்.. சிவகார்த்திகேயனால் தவிடுபடியாகுமா?

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில் 12 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியாகிறது. மேலும் இப்படம் முதல் நாள் ஐ எம் எக்ஸ் முன்பதிவு நிரம்பி விட்டது. இவ்வாறு மாவீரன் படத்திற்கு முட்டுக்கட்டையாக இப்படம் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவை பார்த்து பயந்து போன மாவீரன் தயாரிப்பாளர், என்னோட படம் தான் எனக்கு மிஷன் இம்பாஸிபிள், அவதார், ஆர்ஆர்ஆர் எல்லாமே. உங்க வயசுக்கு இப்படி ஒரு புகைப்படம் ஷேர் பண்ணி, நீங்க இத பண்ணி இருக்க வேண்டாம் சார் என ஆடி போய் ஒரு பதிவு போட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு எப்படி ஒரு செல்வாக்கு இருக்கா என குறிப்பிடுகிறார்கள்.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : நாசுக்காக ஒதுங்கிய கமல், ரஜினி.. சிவகார்த்திகேயனை மீண்டும் தூக்கி விட தனுஷ் காட்டிய விசுவாசம்

Trending News