வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Sun Tv : மே 12 தொலைக்காட்சிகளில் வெளியாகும் 5 படங்கள்.. தனுஷை வைத்து கல்லாகட்ட நினைக்கும் சன் டிவி

மே 12ஆம் தேதி அன்னையர் தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சியில் புது படங்கள் வெளியாகிறது. அதாவது கடந்த வருடம் அல்லது இந்த வருடம் தொடக்கத்தில் வெளியான படங்களை பிரபல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர்.

இதற்கு காரணம் எப்படியாவது தங்களது டிஆர்பிஐ ஏற்ற வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு புதுப்படங்களை வெளியிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் மதியம் 3 மணிக்கு உதயநிதி, பகத் பாசில், வடிவேலு நடித்த மாமன்னன் ஒளிபரப்பு செய்யப்படுகிறது

இப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தொலைக்காட்சியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்ததாக மாலை 6 மணிக்கு கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் நடிப்பில் சலார் படம் உருவாகி இருந்தது.

சலாருக்கு போட்டியாக வெளியாகும் கேப்டன் மில்லர்

இந்தப் படம் மிக விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதேபோல் தனுஷை வைத்து கல்லா கட்ட சன் டிவி திட்டமிட்டுள்ளது. சலாம் படத்திற்கு போட்டியாக மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் கேப்டன் மில்லர் படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த படம் ஜனவரி மாதம் வெளியான நிலையில் விரைவில் தொலைக்காட்சியில் போடப்படுகிறது. மேலும் ஜீ டிவியில் அனுஷ்கா நடிப்பில் வெளியான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் ஒளிபரப்பு ஆகிறது. மேலும் இதே ஜீ திரை தொலைக்காட்சியில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படமும் வெளியாகிறது.

ஆகையால் இந்த வார அன்னையர் தினமான மே 12 ஞாயிற்றுக்கிழமை தியேட்டரை காட்டிலும் சின்னத்திரையில் அசத்தலான படங்களை போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுகின்றனர். இதில் எந்த தொலைக்காட்சி அதிக டிஆர்பி பெருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News