வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

May 17 OTT release: மே 17 வெளியாகும் 19 படங்கள்.. ட்ரைலரால் சொதப்பிய ஹாட் ஸ்பாட் எதில் தெரியுமா.?

ஒவ்வொரு வாரமும் தியேட்டரில் பல படங்கள் படையெடுக்கும் நிலையில் இந்த வாரம் மே 17 ஓடிடி தளத்தில் கிட்டத்தட்ட 19 படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் நாம் பெரிதும் காத்துக் கொண்டிருந்த படங்கள் இந்த வாரம் வெளியாகிறதா என்பதை பார்க்கலாம்.

தமிழை பொறுத்தவரையில் விக்னேஷ் கார்த்திக்கின் ஹாட் ஸ்பாட் படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலரில் டபுள் மீனிங் வசனங்கள் மற்றும் மோசமான காட்சிகள் இடம் பெற்றதால் தியேட்டரில் வரவேற்பு இல்லை. இயக்குனர் தயவுசெய்து படத்தை பார்க்க வாருங்கள் என கெஞ்சி கேட்டிருந்தார்.

அப்போதும் திரையரங்குகளில் வரவேற்பு கிடைக்காத நிலையில் மிக குறுகிய காலத்திலேயே ஓடிடியில் வெளியாகிறது. வசந்த பாலன் மற்றும் கிஷோர் ஆகியோர் நடிப்பில் உருவான தலைமைச் செயலகம் படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

பாகுபலி க்ரௌன் ஆப் பிளட் என்ற வெப் சீரிஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. அதேபோல் பிரிட்ஜெட்டன் சீசன் 3 சீரிஸ் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. தி 8 ஷோ என்ற கொரியன் வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. வித்யாவசூலஹகம் என்ற தெலுங்கு படம் மே 17 ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மேலும் காட்ஸில்லா எக்ஸ் காங் தி நியூ எம்பயர் மே 13ம் தேதி புக் மை ஷோவில் ஸ்ட்ரீமிங் ஆகி உள்ளது. பிக் சிகார் படம் ஆப்பிள் டிவியில் வெளியாகிறது. மேடம் வெப் என்ற வெப் தொடர் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. அவுட்டர் ரேஞ்ச் சீசன் 2 பிரைம் வீடியோவில் மே 16 ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இவ்வாறு இந்த வாரம் ஓடிடியில் எக்கச்சக்க படங்கள் வெளியாவதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைய இருக்கிறது. அதோடு தியேட்டரில் பட்டையை கிளப்பிய காட்ஜில்லா எக்ஸ் காங் படம் ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் அதிகம் பார்த்து வருகிறார்கள்.

Trending News