புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Manjummel Boys : இந்த வாரம் ஓடிடி, தியேட்டரில் வெளியாகும் 12 படங்கள்.. அரண்மனை 4, மஞ்சுமல் பாய்ஸ் என பட்டைய கிளப்ப வரும் மூவிஸ்

மே மாதம் முதல் வாரம் என்பது மட்டுமல்லாமல் கோடை விடுமுறை என்பதால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகம் வர காணப்படுகிறது. இதை மனதில் வைத்து தியேட்டர் மற்றும் ஓடிடியில் நிறைய படங்கள் வெளியாகிறது.

அந்த வகையில் தியேட்டரில் இந்த வாரம் மே மூன்றாம் தேதி ஐந்து படங்கள் வெளியாகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 படம் வெளியாகிறது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த வருகிறது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் காளி வெங்கட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படமும் மே மூன்றாம் தேதி வெளியாகிறது. இதே நாளில் அருண் கே பிரசாந்த் இயக்கத்தில் எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் அக்கரன் படமும் வெளியாகிறது.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் மஞ்சுமல் பாய்ஸ்

அனில் கட்ஸ் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் சபரி படமும் மே 3 உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ராதிகா ஐ இயக்கத்தில் தன்ஷிகா, அசோக் நடிப்பில் உருவான தி புரூப் படமும் அன்று வெளியாகிறது.

அதே போல் ஓடிடியிலும் எக்கச்சக்க படங்கள் வெளியாகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்த மஞ்சுமல் பாய்ஸ் மே ஐந்தாம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. ஆவேசம் படம் மே 17ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

மே 10 பிருத்விராஜின் ஆடு ஜீவிதம் படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. அக்ஷய் குமார், மாதவன் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான சைத்தான் படம் மே மூன்றாம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. மேலும் தி டிபிகல் ஃபேமிலி படம் நெட்பிளிக்ஸில் மே 4 வெளியாகிறது.

மேலும் ஹாலிவுட்டில் உருவான தி ஐடியா ஆப் யூ படம் மே இரண்டாம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. மேலும் கார்ட்டூன் படமான டி டாட் பி பான் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 2 வெளியாகிறது. இவ்வாறு இந்த விடுமுறையை படங்கள் பார்த்து கண்டு களிக்கலாம்.

Trending News