மே மாதம் வெளியான 5 படங்களின் மொத்த வசூல்.. சந்தானத்தை ஓரம் கட்டிய ஸ்டார் கவின்

May Released Movies Collection: இந்த மாதம் கோலிவுட் ஓரளவுக்கு தலை நிமிர்ந்து உள்ளது. கடந்த சில மாதங்களாகவே தமிழில் வெளிவரும் படங்கள் பெரிய அளவில் வசூல் பெறவில்லை.

அவ்வளவு ஏன் கடந்த மாதம் வெளியான விஷாலின் ரத்னம் கூட பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியான பிறகு மொக்கை வாங்கியது. அதை அடுத்து மே 3ம் தேதி வெளியான அரண்மனை 4 வசூல் வேட்டை நடத்துமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

ஆனால் நூறு கோடியை கலெக்ஷன் செய்து இப்படம் மாஸ் காட்டியுள்ளது. அந்த வகையில் இந்த மாதம் வெளியான முக்கிய ஐந்து படங்களின் வசூல் நிலவரத்தை பற்றி இங்கு காண்போம்.

அதன்படி சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 உலக அளவில் 100 கோடியை தாண்டி வசூலித்த நிலையில் தமிழக அளவில் 61 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது. அடுத்ததாக கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

சந்தானத்தை முந்திய கவின்

அதன்படி 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் மொத்தமாக 19.6 கோடிகளை வசூலித்துள்ளது. இதற்கு அடுத்ததாக சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டது.

ஆனால் வசூலை பொருத்தவரையில் கவினின் ஸ்டார் படத்தை இவரால் முந்த முடியவில்லை. அதன்படி இதன் ஏழு நாள் கலெக்ஷனை பொருத்தவரை 5.79 கோடியாக உள்ளது. மொத்த கலெக்ஷன் 9.58 கோடி ஆகும்.

இதற்கு அடுத்து ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் கடந்த வாரம் PT சார் வெளியானது. ட்ரெய்லரிலேயே அதிக கவனம் பெற்ற இப்படம் 5 நாட்களில் 6.04 கோடி வரை வசூலித்து இருக்கிறது.

Aranmanai 4
Star
Inga Naan Thaan Kingu
PT Sir
Turbo

இந்த வாரம் சூரியின் கருடன் படம் வெளியாவதால் இதன் வசூல் கொஞ்சம் டல்லடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக மம்முட்டியின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டர்போ தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதன்படி தமிழக தியேட்டர்களில் இப்படம் 1.78 கோடியை வசூலித்துள்ளது. மொத்தமாக 44.8 கோடி கலெக்ஷன் ஆகி இருக்கிறது. ஆனால் இதன் பட்ஜெட் 70 கோடியாக இருக்கையில் இது குறைவான வசூல் தான். இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் ஏறுமா இறங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த மாதம் வெளியான படங்களில் வெற்றி யாருக்கு.?

Next Story

- Advertisement -