புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிரதீப் சோலிய முடிச்சாச்சு, அடுத்த பாயாசம் யாருக்கு.? வேட்டைக்கு தயாராகும் மாயா அண்ட் கோ

Biggboss 7: எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு பிக்பாஸ் சீசன் 7 ரணகளமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் போட்டியாளர்களின் கேம் ப்ளான் எதிர்பார்க்காத வகையில் இருக்கிறது. இதுவே விஜய் டிவியின் டிஆர்பிக்கும் ஒரு விதத்தில் பக்க பலமாக இருந்து வருகிறது.

அதிலும் முக்கியமாக மாயா சில அல்லக்கைகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு செய்யும் வில்லத்தனம் ஆணவத்தின் உச்சகட்டம். அந்த வகையில் பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு இவர் தான் ஒரு முக்கிய காரணம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இதற்கு பின்னணியில் இருக்கும் ஒரே காரணம் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டம் மட்டுமே. அதனாலேயே ஒரு பொங்கலை வைத்து அவரை மாயா வெளியேற்றி விட்டார். அதற்கு அடுத்ததாக இப்போது ரசிகர்களின் ஆதரவு விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு இருக்கிறது.

Also read: என்னது நரியா, ஹே அமுல் பேபி.. விஷ்ணுவை திருப்பி அடிக்கும் கர்மா, கோர்த்து விட்ட பிக்பாஸ்

இதை வார இறுதியில் வரும் கைத்தட்டலை வைத்து மாயா மற்றும் பூர்ணிமா தெரிந்து கொண்டார்கள். அதனாலேயே நேற்றைய எபிசோடில் பூர்ணிமா அர்ச்சனாவுக்கு லட்டு கொடுத்து பிரண்ட்ஷிப் தூது விட்டார். ஆனால் உண்மையில் அர்ச்சனாவை வைத்து விசித்ராவை காலி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த கூட்டத்தின் பிளான்.

இதற்கு மணி மற்றும் ரவீனாவை பகடைக்காயாக அவர்கள் பயன்படுத்த நினைக்கின்றனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட மணி இது குறித்து விசாரிக்கிறார். அப்போது பூர்ணிமா தங்கள் திட்டத்தை உளறி கொட்டுகிறார். ஏனென்றால் விசித்ரா கடுமையான போட்டியாளராக மாறிவிட்டார் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.

அதனாலேயே இப்போது விசித்ராவுக்கு பாயாசத்தை போட இவர்கள் தயாராகி விட்டனர். அதற்கு அர்ச்சனாவை துருப்புச் சீட்டாக பயன்படுத்த நினைக்கின்றனர். இதில் அர்ச்சனா வீழ்வாரா, விசித்ரா சுதாரிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: வா வா ப்ரோமோ பொறுக்கி.. யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு, பத்த வச்சு குளிர் காயும் பிக்பாஸ்

Trending News