ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

தினேஷை எவிக்ட் செய்ய திட்டம் போட்ட மாயா, பூர்ணிமா.. கைகட்டி வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

BB7 Tamil: பிக் பாஸ் ஏழாவது சீசனில் பார்வையாளர்கள் அதிகம் வெறுக்கும் போட்டியாளர்களாக மாயா மற்றும் பூர்ணிமா இருக்கிறார்கள். வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நம்ம ரெண்டு பேரும் தான் கேமை சரியாக விளையாடுறோம் என்று சொல்லி தனக்குத்தானே பெருமை பீத்திக் கொண்டு பிக் பாஸ் வீட்டினுள் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

போன வாரம் முழுக்க அர்ச்சனாவை டார்கெட் செய்து கதற விட்டுக் கொண்டிருந்தார்கள் மாயா மற்றும் பூர்ணிமா. அதே நேரத்தில் முழுசாக புரிந்து கொண்டு அவரை எப்படி தூக்குவது என திட்டம் தீட்டி விட்டார்கள். முதலில் அவருடைய மனைவி ரட்சிதாவை வைத்து எமோஷனலாக தாக்கலாம் என பிளான் செய்து வைத்திருந்தார்கள்.

அதிலும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தினேஷுக்கு ஆடியன்ஸ்கள் கைதட்டியதும் ஆடிப் போய்விட்டார் பூர்ணிமா. அவருடன் உறவாடி கெடுக்கலாம் என மாயா திட்டமிட்டு சொன்னாலும், பூர்ணிமா நேராக எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதுக்கு ஏற்றது போல் இன்று ரோல் பிளே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள், பெண் போட்டியாளர்கள் போலவும், பெண்கள் ஆண் போட்டியாளர்கள் போலவும் வேடமிட்டு அவர்களைப் போன்றே நடித்துக் காட்ட வேண்டும் என்பதுதான் ஆட்டம்.

Also Read:பிரதீப் சோலிய முடிச்சாச்சு, அடுத்த பாயாசம் யாருக்கு.? வேட்டைக்கு தயாராகும் மாயா அண்ட் கோ

வீட்டில் இருக்கும் எல்லோரும் ஒவ்வொரு போட்டியாளர்களின் வேடத்தை ஏற்று நடிக்க திட்டமிட்டு கொண்டிருந்தார்கள். அதில் மாயா மற்றும் பூர்ணிமா தலையிட்டு தினேஷை போன்று யாராலும் நடிக்க முடியாது, அவர் எப்படி ஒரு மேனரிசத்தை பயன்படுத்துகிறார் என்பது எங்கள் யாருக்கும் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். அதேபோன்று தினேஷையும் வேறு எந்த பெண் போட்டியாளர்களின் வேடத்தையும் போடக்கூடாது அவருக்கு அது சரியாக செய்யத் தெரியாது என்றும் தடுத்து விட்டார்கள்.

வீட்டில் இருக்கும் எல்லோருமே ஒவ்வொருவரின் வேடத்தை எடுத்து நடித்துக் கொண்டிருக்கும் போது தினேஷ் மட்டும் அவருடைய கேரக்டரிலேயே இருக்கிறார். தினேஷ் இந்த டாஸ்க் விளையாட கூடாது என்பதுதான் மாயா மற்றும் பூர்ணிமாவின் திட்டம். அவர் நன்றாக விளையாடிவிட்டால் மக்களை கவர்ந்து விடுவார் என்று நினைத்து இப்படி ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்கள்.

மாயா மற்றும் பூர்ணிமா தினேஷை விளையாட விடாமல் பண்ணுவதை பிக் பாஸ் எந்த கேள்வியும் கேட்கவில்லை. தினேஷ் டாஸ்க் நன்றாக விளையாடினால் மக்களை கவர்ந்து விடுவார் என்று அவர்கள் இருவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சூழ்ச்சியால் தினேஷ் மக்கள் மனதில் இன்னும் அதிகமாகத்தான் நிலைத்து நிற்கிறார்.

Also Read:வா வா ப்ரோமோ பொறுக்கி.. யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு, பத்த வச்சு குளிர் காயும் பிக்பாஸ்

Trending News