வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விசித்ரா மண்டையை கழுவும் மாயா.. என்ன உருட்டுனாலும் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல

Biggboss 7: பிக்பாஸ் வீட்டின் டானாக இருக்கும் மாயா இந்த வாரம் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். சென்ற வாரம் உச்சகட்ட வில்லத்தனத்தை காட்டிய அவரை ஆண்டவர் லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். அதனாலேயே இப்போது அவர் நல்ல பிள்ளை போல் சீன் போட்டு வருகிறார்.

ஆனாலும் அவருடைய ஒரிஜினாலிட்டி அவ்வப்போது தலை காட்டி விடுகிறது. அந்த வகையில் தற்போது அவர் விசித்ராவுக்கு பாயாசம் போடும் வேளையில் இறங்கியுள்ளார். கடந்த வாரம் அவருக்கு கிடைத்த கைதட்டல்களை பார்த்து மாயா, பூர்ணிமா இருவரும் வயித்தெரிச்சலில் கதறினார்கள்.

அதில் பூர்ணிமா ஒரு படி மேல் போய் விசித்ராவுக்கு நிறைய சப்போர்ட் இருக்கு என வெளிப்படையாகவே புலம்பி தீர்த்தார். இந்நிலையில் மாயா பிரதீப் விவகாரத்தை வைத்து விசித்ராவை தன் பக்கம் இழுக்கும் வேலையில் இறங்கியுள்ளார். தனக்கு பிரதீப்பால் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் தன்னுடைய நண்பர்களுக்கு ஆபத்து ஏற்பட்டது.

Also read: இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேற போகும் செட் ப்ராப்பர்டி.. இணையத்தை கலக்கும் ஓட்டிங் லிஸ்ட்

அவர்கள் என்னிடம் கதறினார்கள். அதனால் தான் உரிமை குரலை தூக்க வேண்டியதாய் போயிற்று என விசித்ராவின் மண்டையை கழுவினர். ஆனாலும் விச்சு இந்த விளையாட்டுக்கு பலியாகி விடக்கூடாது என சாமர்த்தியமாகவே இந்த விஷயத்தை கையாண்டார்.

இப்படியாக மாயா உருட்டிய உருட்டு அம்மஞ்சல்லிக்கு கூட பிரயோஜனம் இல்லாமல் போனது. ஏனென்றால் தற்போது இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரை தான் கழுவி ஊற்றி வருகின்றனர். அதனாலயே இப்போது மாயாவின் ஆதரவாளர்கள் விசித்ராவை டேமேஜ் செய்யும் வேலையில் இறங்கி இருக்கின்றனர்.

மேலும் அவர் மீண்டும் மீண்டும் பிரதீப் விவகாரத்தை கையில் எடுத்து தன்மீது தவறு இல்லை என நிரூபிக்க பார்க்கிறார். ஆனாலும் இந்த விவகாரத்தில் பிரதீப் வாயை திறந்தால் பல பேரின் குட்டு வெளிவரும் அபாயம் இருக்கிறது. இப்படியாக விசித்ராவை காலி செய்ய மாயா நினைத்தாலும் ஆடியன்ஸின் மொத்த ஆதரவும் அவருக்கு தான் இருக்கிறது.

Also read: கெட்டப்ப மாத்துனாலும் கேரக்டர் மாற மாட்டேங்குதே.. மொத்த வன்மத்தையும் கக்கும் பூர்ணிமா

Trending News