வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கமல் இப்படி பண்ணிட்டாரே, உண்மையை உளறிய மாயா.. சாயம் எல்லாம் வெளுத்து போச்சு நிக்சன்

BB7 Tamil: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் வாங்கிக்கொண்டு வெளியே சென்று இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், இன்று வரை பிக் பாஸ் வீட்டிற்குள் அவருடைய பேச்சு ஓய்ந்த பாடு இல்லை. பிரதீப் ஆண்டனிக்கு எதிராக என்ன நடந்தது என்பதை மாயாவே தன்னுடைய வாயால் நேற்று சொல்லி இருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மேல் தப்பு இருக்கிறது, குற்றம் சாட்டியவர்கள் உண்மையை சொன்னார்களா என தீர விசாரிக்க வேண்டும் என்று கமல் சொல்லி இருந்தார். ஒரு பக்கம் மாயா கூட்டணி நீங்கள் ரெட் கார்டு கொடுத்ததால் தான் நாங்கள் எடுத்துக் காட்டினோம் என்று கமலிடம் சொல்ல, கமல் நான் காட்டினால் நீங்கள் வேண்டாம் என்று சொல்ல வேண்டி தானே என்று பிரச்சனையை பூசி மொழுகி விட்டார்.

கமல் தன்னுடைய சொந்த ஈகோவிற்காகத்தான் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்தார் என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இதைப்பற்றி நிக்சன் இடம் பாத்ரூமில் பேசும் மாயா, கமல், பிரதீப்புக்கு ரெட் கார்டு நாம்தான் கொடுத்தோம் என்பது போல் பேசிவிட்டார். எல்லா பிரச்சனையும் இப்ப நம்ம தலை மேல தூக்கி போட்டு விட்டார் என்று சொல்கிறார்.

Also Read:மாயாவுக்கு கட்டம் கட்டிய பூர்ணிமா.. இனிமேதான் ஆட்டமே ஆரம்பம்

வெளியில் போனால் நாம் என்ன செய்வது, பிரதீப் ரசிகர்கள் இது பற்றி கேட்டால் என்ன சொல்வது என்று புலம்புகிறார் மாயா. அவர் இப்படி சொல்வதில் இருந்தே, வீட்டில் இருப்பவர்கள் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை, கமல் தான் அதை திணித்திருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.

ஒரு போட்டியாளரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புகிறார்கள். இது பிரதீப்பின் எதிர்காலத்திற்கே கேள்விக்குறியாக அமையும். அப்படி இருக்கும் பொழுது அந்த ரெட் கார்டு எதனால் கொடுக்கப்பட்டது, யாரால் கொடுக்கப்பட்டது என்று யாருக்குமே புரிதல் இல்லாமல் இருப்பது தான் இந்த விஷயத்தில் மர்மமாக இருக்கிறது.

அதிலும் மாயாவுக்கு பிரதீப்பின் ரசிகர்கள் மீது பயம் வருகிறது என்றால், அவருக்கு ரசிகர்கள் அதிகம் என்ற விஷயம் மாயாவால் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. பிரதீப் செய்த தவறுக்கு ஆதாரம் இருந்தால், மாயா கண்டிப்பாக அவருடைய ரசிகர்களை பற்றி கவலைப்பட மாட்டார் என்பது அவர் புலம்பும் வீடியோவை பார்க்கும் பொழுதே தெரிகிறது.

Also Read:மாயாவின் கூட்டணியை அசைத்துப் பார்க்கும் நாமினேஷன்.. டேஞ்சர் சோனில் இருக்கும் 2 பேர்

Trending News