ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சந்தியாராகம் சீரியலில் புவனேஸ்வரி முகத்தில் கரியை பூசிய தனம்.. சீனு எடுத்த முடிவு, உச்சகட்ட சந்தோஷத்தில் மாயா

Sandhiyaragam Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சந்தியாராகம் சீரியலில், மாயா என்ன பண்ணாலும் சரியாகத்தான் இருக்கும் என்று ரகுராம் மலை போல் நம்பி இருந்தார். ஆனால் தற்போது மாயா எடுத்த முடிவால் ரகுராம் மொத்தமாக உடைஞ்சு போய்விட்டு எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். இருந்தாலும் மாயா மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று ஜானகி தனியாக மாயாவை சந்தித்து பேசி எல்லா உண்மையும் தெரிந்து கொண்டார்.

அந்த வகையில் மாயா மற்றும் கதிருக்கு ஜானகி சப்போர்ட்டாக நின்னு புவனேஸ்வரிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து விட்டார். கதிர் கட்டின தாலியை எப்படியாவது தனத்தை வைத்து கழட்டிவிட்டு கார்த்தி கையால தாலி கட்ட வைத்து விடனும் என்று புவனேஸ்வரி சதி செய்தார். ஆனால் அது மாயா மற்றும் ஜானகி இருக்கும் வரை நடக்காது என்பதற்கு ஏற்ப அந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

பிறகு ஜானகி, தனத்தை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டார். இருந்தாலும் புவனேஸ்வரி பொருத்தவரை தனம் மனதில் இன்னும் கார்த்திக்கின் நினைப்பு தான் இருக்கும். அதனால் பஞ்சாயத்தை கூட்டி கதிர் கட்டின தாலியை கழட்ட சொல்லலாம் என்று புவனேஸ்வரி பிளான் பண்ணினார். அதன்படி கிராமத்தில் கூடிய பஞ்சாயத்தில் அங்கு நாட்டாமை பண்ணியவர்கள் தனத்திடம் கேள்வி கேட்கிறார்கள்.

அந்த வகையில் தனத்திடம் நீ யாருக்கும் பயந்து முடிவெடுக்க வேண்டாம். உனக்கு என்ன தோணுதோ அதை மட்டும் சொன்னால் போதும் என்று சொல்லி உனக்கு கதிர் கூட சேர்ந்து வாழ இஷ்டமா இல்லையா என்று கேட்கிறார்கள். அதற்கு தனம் யோசித்து பார்த்து கதிருடன் சேர்ந்து வாழ எனக்கு சம்மதம் தான் என்று முடிவு சொல்லிவிட்டார். இதனை எதிர்பார்க்காத புவனேஸ்வரி குடும்பம் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியாகி விட்டார்கள்.

அத்துடன் புவனேஸ்வரி முகத்தில் கரியை பூசும் விதமாக தனம் எடுத்த முடிவு ஜானகிக்கு பெருத்த சந்தோஷத்தை கொடுத்து விட்டது. அதே மாதிரி சீனுவிடம் அங்கு இருப்பவர்கள் உனக்கும் மாயாவுக்கும் ஒத்துவரவில்லை என்ற பிரித்து விடவா என்று கேட்கிறார்கள். உடனே சீனுவின் அம்மா பத்மா, நல்லா யோசித்து முடிவு பண்ணு. உன்னோட அப்பா தற்போது உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதற்கு காரணம் இந்த மாயா தான் என்று உசுப்பேத்தி பேசுகிறார்.

ஆனாலும் சீனு சொல்ல முடிவு என்னவென்றால் எனக்கு மாயவுடன் சேர்ந்து வாழ இஷ்டம் தான் என்று சொல்கிறார். உடனே பத்மா அதிர்ச்சியாகி என்ன சொல்கிறாய் என்று சீனுவை பார்த்து கேட்கிறார். அதற்கு சீனு நான் ஒன்னும் இஷ்டமில்லாமல் அவள் கழுத்தில் தாலி கட்டவில்லை.

அவளை விரும்பி தான் நான் தாலி கட்டினேன், அதனால் அவ்வளவு ஈசியாக எங்களுடைய உறவை முறித்து விட முடியாது என்று நச்சென்று பதில் கொடுத்து அங்கே இருப்பவர்கள் அனைவரையும் அடக்கி விட்டார். அந்த வகையில் இனி கதிர் தனம் மற்றும் மாயா சீனுவின் டாம் அண்ட் ஜெர்ரி சண்டையும், காதலையும் அடுத்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Trending News