செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 17, 2024

சந்தியா ராகம் சீரியலில் ரகுராமின் மகளை காப்பாற்றிய மாயா கதிர்.. கார்த்திக்கை பற்றி தனம் தெரிந்து கொள்வாரா?

Sandhiya Ragam Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், தனத்தை வைத்து எப்படியாவது ரகுராம் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று புவனேஸ்வரி திட்டம் போட்டு வருகிறார். அதே மாதிரி கார்த்திக், தனத்தை எப்படியாவது சொந்தமாக வேண்டும் என்று குறுக்கு வழியில் பிளான் போடுகிறார்.

அதற்காக தனத்திற்கு போன் பண்ணி நீ இல்லாத வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. இப்பொழுது நான் விஷம் குடித்து சாகப் போறேன். ஆனால் கடைசியாக உன்னிடம் பேச வேண்டும் என்று பண்ணை வீட்டுக்கு வரச் சொல்லி கூப்பிடுகிறார். தனம் நான் வரமுடியாது என்று சொல்லிய நிலையில் நான் செத்தாலும் பரவாயில்லை என்று பிளாக்மெயில் பண்ணி தனத்தை வர வைக்கிறார்.

தனமும், கார்த்திக் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வீட்டில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் கார்த்திக் கூப்பிட்ட இடத்திற்கு போகிறார். ஆனால் தனம் போகும் பொழுது சிவராமன் பார்த்து விடுகிறார். அதனால் பின்னாடியே பாலோ பண்ணி போகும் பொழுது தனம், சிவராமன் வந்திருப்பதை பார்த்ததால் மரத்துக்கு பின்னாடி ஒளிந்து விடுகிறார்.

அப்படி ஒளியும்போது தனம் காலில் பாம்பு கொட்டி விடுகிறது. இது தெரியாத தனம் அங்கிருந்து சிவராமனுக்கு தெரியாமல் கார்த்திக் இருக்கும் இடத்திற்கு போய் விடுகிறார். ஆனால் வீட்டில் தனம் இல்லை என்று தெரிந்து கொண்ட மாயா மற்றும் கதிர் புவனேஸ்வரி வீட்டுக்கு போய் செக் பண்ணி பார்க்கிறார்கள். ஆனால் அங்கேயும் இல்லை என்பதால் புவனேஸ்வரிக்கு எச்சரிக்கை கொடுத்து கிளம்பி விடுகிறார்கள்.

அடுத்ததாக தனம் மற்றும் கார்த்திக் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கார்த்திக் தனத்தை மயக்கம் அடைய வைப்பதற்கு மயக்க ஊசி போட முயற்சி எடுக்கிறார். இது எதுவும் தெரியாத தனம், எனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ கல்யாணம் ஆகிவிட்டது. அந்த வாழ்க்கையை நான் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். எனக்காக இல்லை என்றாலும் என்னுடைய அப்பா மற்றும் அம்மாவுக்காக நான் கல்யாண வாழ்க்கையை ஏற்று கொண்டேன்.

நீங்களும் என்னை மறந்து உங்களுக்கான ஒரு வாழ்க்கையை தேடி கொள்ளுங்கள் என்று கார்த்திக்கு அட்வைஸ் பண்ணுகிறார். அப்படி பண்ணும் போது பாம்பு கொத்தியதால் மயக்கம் போட்டு தனம் கீழே விழுந்து விடுகிறார். இது தெரியாத கார்த்திக் தனத்திடம் தப்பாக நடக்க முயற்சி செய்கிறார். ஆனால் அந்த நேரத்தில் சிவராமன் வந்து கதவை தட்டிய நிலையில் தனம் இங்கே வந்தது போல் இருந்தது என்று அனைத்து ரூமையும் செக் பண்ணி பார்க்கிறார்.

ஆனால் கார்த்திக் உங்க பொண்ணு மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் சந்தேகப்படுகிறதா என்று சொல்லி சிவராமனை அங்கிருந்து கிளப்பிவிட்டார். பிறகு புவனேஸ்வரி மற்றும் கார்த்திக் அப்பாவும் கார்த்திக் இடத்திற்கு வந்து செக் பண்ணி பார்க்கிறார்கள். இவர்கள் வந்ததும் கார்த்திக் தனத்தை தூக்கி கட்டிலுக்கு கீழே போட்டு விடுகிறார். உடனே தனம் இங்கே இல்லை என்று புவனேஸ்வரி மற்றும் கார்த்திக் அப்பாவும் கிளம்பி விடுகிறார்.

அடுத்ததாக கதிர் மற்றும் மாயா வீட்டிற்குள் நுழைந்து தனத்தின் நிலைமையை பார்த்து கார்த்திகை அடித்து தனத்தை அங்கிருந்து கூட்டிட்டு போய் விடுகிறார்கள். இதன் பிறகு கார்த்திக் பற்றிய உண்மையை தனம் தெரிந்து கொண்டு கதிருடன் வாழ்க்கையை ஆரம்பித்தால் விறுவிறுப்பாக கதை அமையும்.

- Advertisement -

Trending News