ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

பிரதீப்பை போல், அர்ச்சனாவை வெளியேற்ற மாயா போட்டிருக்கும் திட்டம்.. சூனியக் கிழவியின் ஆட்டம் ஆரம்பம்

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட அதிர்வலையே இன்னும் ஓயாமல் இருக்கிறது. அதற்குள் பிரதீப்புக்கு பிறகு மக்களின் அமோக ஆதரவை பெற்று வரும் அர்ச்சனாவை வெளியேற்றுவதற்கு மாயா திட்டம் போட்டு வருகிறார். ஒரு பக்கம் ஃபேமிலி ரவுண்டு சென்டிமென்டாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், மற்றொரு பக்கம் மாயா இந்த திட்டத்தையும் அரங்கேற்ற ஆரம்பித்து இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் இரண்டு வாரங்களிலேயே பிரதீப் ஆண்டனி பார்வையாளர்களிடையே அதிக கைதட்டுகளை வாங்கினார். இதை வைத்து அவருக்கு வெளியில் அதிக ஆதரவு இருப்பதை மாயா கண்டுபிடித்தார். வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களை கைப்பாவைகளாக பயன்படுத்தி பிரதீப்புக்கு எதிராக ரெட் கார்டு காண்பிக்க வைத்தார்.

பிரதீப் இந்த விளையாட்டில் இல்லை என்றால் தனக்கு எதிராக ஆடுவதற்கு யாருமே இல்லை என மாயா மனக்கணக்கு போட்டு வைத்திருந்தார். அதை இப்போது ஒட்டுமொத்தமாக மாற்றி இருப்பது தினேஷ், அர்ச்சனா மற்றும் விசித்ரா. இதில் அர்ச்சனாவுக்கு பிரதீப் ஆண்டனிக்கு கிடைத்த அதே அளவுக்கான கைத்தட்டுகள் வார இறுதி எபிசோடுகளில் கிடைக்கிறது.

Also Read:மணியை எச்சரித்த ரவீனா ஃபேமிலி.. என்னடா இது! டிஆர்பிக்காக கலர் கலரா படம் காட்டுறீங்க

கடந்த சில வாரங்கள் முழுக்க மாயா ரொம்பவும் சைலன்ட் மோடில் இருக்கிறார். பூர்ணிமாவை விட்டு விலகி விட்டாரா, அல்லது நாடகமா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. அப்படி இருக்கும் பொழுது அர்ச்சனாவை நம்ப வைக்கும் அளவுக்கு நடித்துக் கொண்டே, அவருக்கு எதிராக திட்டங்கள் தீட்டி வருகிறார். இந்த முறை தன்னுடைய பிளானை யாருக்கும் சொல்லாமலேயே அவர்களை கீ குடுக்கும் பொம்மைகளாக மாற்ற பார்க்கிறார்.

ஆட்டத்தை ஆரம்பிக்கும் மாயா

சில தினங்களுக்கு முன் அர்ச்சனா மேக்கப் பற்றி சில விஷயங்களை பேசி இருப்பார். அதை டிப்ஸாக கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மாயா, பூர்ணிமா மற்றும் விஜய் இடம் அர்ச்சனா நிறத்தை பற்றி பேசுகிறார் என ட்விஸ்ட் பண்ணி விடுகிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் நிறத்தைப் பற்றி, மொழியை பற்றி பேசுகிறார்கள் என்ற வதந்தி கிளப்பப்பட்டு இருக்கிறது.

மாயா மெதுவாக அர்ச்சனா நிறப் பாகுபாடு பார்க்கக் கூடியவர் என்ற மாய பிம்பத்தை உருவாக்குகிறார். அடுத்தடுத்து அர்ச்சனா எதில் சிக்குவார் என காத்துக் கொண்டிருக்கிறார் மாயா. அவரின் திட்டத்தை அறிந்து அர்ச்சனா தான் உஷாராக இருக்க வேண்டும். எந்த நேரம், எப்படி ஒரு பழியை தூக்கி போட்டு பிரச்சனையை பெரிதாக்குவார்கள் என்று இந்த சீசனில் கணிக்கவே முடியவில்லை.

Also Read:ரவீனாவை எச்சரித்த கோட் வேர்ட்.. தொக்கா தூக்கி வெளியில் வீசிய பிக்பாஸ்

Trending News