சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

குழம்பிய குட்டையில் மீன் பிடித்த பிக்பாஸ்.. வைல்ட் கார்ட் பத்த வச்ச நெருப்பால் ஆட்டம் கண்ட மாயா மாஃபியா

Biggboss 7: கடந்த வாரம் ரொம்பவும் போராக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது சூடு பிடித்துள்ளது ஏற்கனவே மக்களால் வெளியேற்றப்பட்ட விஜய் வர்மா, அனன்யா இருவரும் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். அவர்களை வைத்தே பிக்பாஸ் குழம்பிய குட்டையில் மீன் பிடித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே மாயா, பூர்ணிமா ஆகியோர் ஆண்டவரால் வறுத்தெடுக்கப்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் இவர்களை கண்டும் காணாமல் விட்ட கமல் இப்போது லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்கிறார். இதை மாயா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் பூர்ணிமா எங்கே தன் பெயர் கெட்டுப் போய் விடுமோ என பதட்டப்படுகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் அதை நாம் தெளிவாகவே பார்த்தோம். அதை தொடர்ந்து வீட்டிற்குள் வந்த விஜய் வர்மா பல விஷயங்களை மூடி மறைத்து பேசி மாயாவுக்கே ஒரு பயத்தை ஏற்படுத்தி விட்டார்.

Also read: கமல் கேட்ட கேள்விக்கு சூடு சொரணை இருந்தா தூக்குல தொங்கிடு பூர்ணிமா.. சரியான சவுக்கடி

அதனாலயே அவர் பிரதீப் விஷயம் வெளியில் எப்படி இருக்கு என கேட்டு விஜய் வர்மாவை சுற்றி வந்தார். அதேபோன்று நிக்சனும் தன்னை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். அதை விஜய் வர்மா புரிந்தும் புரியாமலும் சொல்லி போக்கு காட்டினார்.

ஆனால் அனன்யா வினுஷா விஷயத்தை நேரடியாகவே கூறி நிக்சன் தலையில் அணுகுண்டை இறக்கினார். ஒரு அக்காவை போய் இப்படித்தான் நீ சொல்லுவியா டா என அவர் கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் நிச்சயம் நிக்சனை சரமாரியாக அறைந்தது போல் இருந்திருக்கும்.

இவ்வாறாக விஜய் வர்மா, அனன்யா பற்ற வைத்த நெருப்பு மாயா மாஃபியாவை பதற வைத்துள்ளது. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என மாயா பூர்ணிமாவுக்கு ஆறுதல் சொன்னாலும் அவர் கண்ணிலும் ஒரு பயம் தெரிகிறது. ஆக மொத்தம் இனி வரும் ஒவ்வொரு எபிசோடும் பயங்கரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: அவமானத்திற்கு அஞ்சி கூனி குறுகும் பூர்ணிமா.. புலம்ப விட்டு வேடிக்கை காட்டும் பிக் பாஸ்

Trending News