வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சந்தியா ராகம் சீரியலில் கார்த்திக்கை திசை திருப்பி தனத்தை காப்பாற்றிய மாயா.. தாலி பெருக்கு பங்க்ஷன்க்கு வரும் ரகுராம்

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியலில், புவனேஸ்வரி தனத்தை வைத்து ரகுராம் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்று சதி செய்தார். அந்த வகையில் தனத்திற்கு போன் பண்ணி உன்னை மறக்க முடியாததால் கார்த்திக் விஷம் குடிக்க போய்விட்டான். தற்போது கார்த்திக் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறான் நீ வந்து பார்க்க வேண்டும் என்று கெஸ்ட் ஹவுஸ்க்கு வர வைக்கிறார்.

புவனேஸ்வரி சொன்னதை நம்பி கார்த்திகை காப்பாற்றுவதற்காக தனம் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லாமல் கெஸ்ட் ஹவுஸ்க்கு போகிறார். ஆனால் மாயா சீனு மற்றும் கதிர் தனத்திற்கு தாலி பெருக்கு பங்க்ஷனை நடத்துவதற்காக கோவிலில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். இதில் தனம் கலந்து கொள்ளக் கூடாது ரகுராம் குடும்பம் அசிங்கப்பட வேண்டும் என்பதற்காக புவனேஸ்வரி விரித்த வலை.

அதில் சிக்கிக் கொள்ளும் அளவிற்கு தனம் கெஸ்ட் ஹவுஸ்க்கு போய் விட்டார். இதை தெரிந்து கொண்ட புவனேஸ்வரி ஊர் பஞ்சாயத்து தலைவர்களை கெஸ்ட் ஹவுஸ்க்கு கூட்டிட்டு போயி கார்த்திக் மற்றும் தனம் ஒன்றாக இருப்பதை காட்டிவிட்டால் ரகுராம் குடும்பத்தை தவறாக புரிந்து கொள்வார்கள் என்று பிளான் பண்ணினார்.

இந்த விஷயம் மாயாவிற்கு தெரிந்த நிலையில் எப்படியாவது தனத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோவிலில் கதிருடன் பிளான் பண்ணுகிறார். ஆனால் போய் காப்பாற்றனும் என்றால் நேரம் ஆகிவிடும் அதற்குள் ஊரில் இருக்கும் பெரிய மனுசங்க போய் விடுவாங்க தனமும் மாட்டிக் கொள்வாள் என்பதால் மாயா ஒரு பிளான் போட்டு விட்டார்.

அந்த வகையில் தேவி குரலில் கார்த்திக்கு போன் பண்ணி நான் இப்பொழுதே உங்களை பார்க்க வேண்டும் நான் சொல்லும் இடத்துக்கு உடனடியாக வரவேண்டும் என்று சொல்லிய நிலையில் கார்த்திக், தேவியை பார்ப்பதற்காக கெஸ்ட் ஹவுஸில் இருந்து கிளம்பி போய் விடுகிறார். இது எதுவும் தெரியாத தனம், கெஸ்ட் ஹவுஸில் கார்த்திகை தேடிப் பார்க்கிறார்.

அங்கே கார்த்திக் இல்லை என்பதால் கோவிலில் ஏற்பாடு பண்ணும் தாலி பெருக்கு பங்ஷனில் கலந்து கொள்வதற்காக போய்விடுகிறார். இது தெரியாத புவனேஸ்வரி ஊர் பெரிய மனுஷன் உடன் கெஸ்ட் ஹவுஸில் வந்து பார்க்கிறார். அங்கே யாரும் இல்லை என்று தெரிந்ததும் தலைவர்கள் அனைவரும் புவனேஸ்வரியை திட்டி விட்டு உங்களுக்கு இதுவே வேலையாக போய்விட்டது.

கோவில் மரியாதை ஜானகி அம்மாவுக்கு கிடைத்தது என்பதால் பொறாமையில் நீங்கள் ரகுராம் குடும்பத்தை அசிங்கப்படுத்த இந்த மாதிரி எங்களை பொய் சொல்லி கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று வாய்க்கு வந்தபடி புவனேஸ்வரி திட்டி விட்டு போய்விட்டார்கள். ஆக மொத்தத்தில் மாயா செய்த காரியத்தால் புவனேஸ்வரி முகத்தில் கரியை பூசி கார்த்திக் இடம் இருந்து தனத்தை காப்பாற்றி விட்டார்.

அடுத்ததாக மாயா சீனு மற்றும் கதிர் தனத்திற்கு பங்க்ஷன் நடைபெற ஆரம்பித்துவிட்டது. ஆனால் இதில் ரகுராம் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் ஜானகி எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஜானகியின் எதிர்பார்ப்பு வீணாக வில்லை என்பதற்கு ஏற்ப ரகுராம் அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு அனைவரையும் சந்தோஷப்படுத்தி விட்டார்.

- Advertisement -

Trending News