ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

அப்ப எல்லாமே நடிப்பா கோபால்.? பூர்ணிமாவை கருவேப்பிலை போல் தூக்கி எறிந்த மாயா

Maya-Poornima: பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாளை நெருங்குவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. இதனால் அடுத்த வாரம் முழுவதும் போட்டிகள் கடுமையாக்கப்பட உள்ளது. அதனாலயே இந்த வாரம் போட்டியாளர்களின் சொந்த பந்தங்கள் வீட்டுக்குள் வந்து அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கின்றனர்.

இது ஒரு விதத்தில் கேம் சேஞ்சர் ஆகவும் இருக்கிறது. வெளியில் என்ன நடக்கிறது? போட்டியாளர்கள் செய்த தப்பு என்ன? என்பதை ஒவ்வொருவரும் புட்டு புட்டு வைத்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட ஹவுஸ் மேட்ஸ் அடுத்த வாரம் தங்கள் விளையாட்டை மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் பிக்பாஸில் ஜோடி புறாக்களாக சுற்றி வரும் மாயா, பூர்ணிமா இருவரின் நட்பும் சோசியல் மீடியாவில் வெகு பிரபலம். ஆனால் இப்போது மாயா சொன்ன ஒரு விஷயம், அத்தனையுமே நடிப்பா கோபால்! என கேட்க வைத்திருக்கிறது.

Also read: ரவீனாவை எச்சரித்த கோட் வேர்ட்.. தொக்கா தூக்கி வெளியில் வீசிய பிக்பாஸ்

அதாவது நேற்று அவரை பார்க்க வந்த குடும்பத்தினர் பிக்பாஸ் விளையாட்டு பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மாயா தன் தங்கையிடம் இந்த வீட்ல யாருமே எனக்கு ஃப்ரெண்ட் கிடையாது. பூர்ணிமாவையும் வந்த நாளிலிருந்து பார்த்துகிட்டு இருக்கேன். எனக்கு தெரியும் இங்க யாரும் எனக்கு நட்பும் கிடையாது உறவும் கிடையாது என்று கூறுகிறார்.

உடனே அவருடைய தங்கை அப்படின்னா உன்னுடைய கேம் சரியானது தான் என்று சொல்கிறார். ஏற்கனவே மாயா டைட்டிலை அடிப்பதற்காக ஒவ்வொருவரையும் ஸ்கெட்ச் போட்டு தூக்கி வந்தார். அதில் பூர்ணிமாவும் விதிவிலக்கல்ல என்பதை நாமினேஷனிலேயே நாம் பார்த்தோம்.

மேலும் பூர்ணிமாவை அவர் கருவேப்பிலை போல் தான் பயன்படுத்திக் கொள்கிறார். அவருக்கு இந்த சென்டிமென்ட் எல்லாம் கிடையாது. இப்படி நட்பை போலியாக பயன்படுத்தி இருக்கும் மாயா அடுத்த வாரத்தில் இருந்து தன் ஆட்டத்தை வேறு மாதிரி கொண்டு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

Also read: பிரதீப்பை போல், அர்ச்சனாவை வெளியேற்ற மாயா போட்டிருக்கும் திட்டம்.. சூனியக் கிழவியின் ஆட்டம் ஆரம்பம்

Trending News