திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கோல்ட் ஸ்டாரால் கொதித்துப் போன மாயா.. இது என்ன பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை

Biggboss 7: கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யம் குறைந்தது போல் காணப்படுகிறது. சென்ற வாரம் பிரதீப் ரெட் கார்டு விவகாரத்தை வைத்து போட்டியாளர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டார்கள். ஆனால் இந்த வாரம் கமலிடம் திட்டு வாங்க கூடாது என நேக்காக அவர்கள் விளையாடுகின்றனர்.

அதனாலேயே வார இறுதியில் என்ன பேசுவது என ஆண்டவர் இப்போது தடுமாறிக் கொண்டிருப்பார். இருந்தாலும் தினேஷ் விஷ்ணு சண்டை, விசித்ரா அழுகை என ஒரு சில விஷயங்கள் பேசுவதற்கு இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ குபீர் சிரிப்பை வரவழைத்து இருக்கிறது.

அதாவது பிக் பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஆண்கள் பெண்கள் ஆகவும் பெண்கள் ஆண்களாகவும் மாறி அலப்பறை செய்து கொண்டிருக்கின்றனர். அதன் முடிவில் கோல்டு ஸ்டாரை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தை தற்போது நடக்கிறது.

Also read: லட்டுல ஆப்பு வைத்த பிக்பாஸ்.. விச்சுவுக்கு பொங்கல் வைக்க பிளான் போடும் Bully Gang

அதில் கேப்டன் தினேஷ் ஐந்து ஸ்டார் இருந்தால் நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவார்கள். அதனால் இந்த ஸ்டாரை மணிக்கு கொடுக்கலாம் என்று யோசனை சொல்கிறார். அதன்படி ஒரு மனதாக கோல்ட் ஸ்டார் மணிக்கு செல்கிறது. ஆனால் இதை வழக்கம் போல மாயா பூர்ணிமா எதிர்க்கின்றனர்.

அதிலும் மாயா ஒரு படி மேலே போய் மணிக்கு எதற்காக கோல்ட் ஸ்டார் கொடுக்க வேண்டும். வீட்டில் திறமையான போட்டியாளர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். உதாரணத்திற்கு விக்ரம் நல்ல பிளேயர் அவனுக்கு கொடுத்திருக்கலாம் என பிராவோவிடம் கொதி நிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்.

Also read: இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேற போகும் செட் ப்ராப்பர்டி.. இணையத்தை கலக்கும் ஓட்டிங் லிஸ்ட்

இதை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் ஆடித்தான் போயிருப்பார்கள். எதே விக்ரம் நல்ல பிளேயரா? இது என்னடா டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை என தற்போது இந்த வீடியோவுக்கு கமெண்ட்டுகள் பறந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு விக்ரம் ஒரு மிக்சர் பார்ட்டியாக வீட்டில் இருக்கிறார். ஆனால் மாயா தனக்கு அவர் ஜால்ரா தட்டுகிறார் என்பதற்காகவே இப்படி மனசாட்சியே இல்லாமல் உருட்டி இருக்கிறார்.

Trending News