செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஏஜென்ட் டீமுக்கு அன்பு கட்டளை இட்ட மாயா.. நீங்க அவ்ளோ நல்லவங்களா இல்லையே!

BB7 Tamil: இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும், மாயா பாஸ் என அது சரியாக இருக்கும். இந்த சீசன் முழுக்க என்ன நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்து ஒவ்வொருவரையும் வெளியில் அனுப்பிய பெருமை மாயாவை தான் சேரும். நன்றாக விளையாடியிருக்க வேண்டிய போட்டியாளர்கள் பலரையும் தன் கூட்டத்தில் ஒருவரை சேர்த்துக் கொண்டு, அவர்களின் மூளையை மழுங்க செய்து ஒவ்வொரு வாரமும் அந்த வீட்டை விட்டு வெளியேற்றினார்.

ஏதாவது ஒரு வாரம் மாயா எலிமினேட் ஆகி விடுவார் என ஆசைப்பட்ட பார்வையாளர்களுக்கு அவர் இரண்டாவது ரன்னர் ஆனதே மிகப்பெரிய ஏமாற்றம் தான். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மாயா ரெட் கார்டு பற்றி பேசுவார், பிரதீப் ஆண்டனியை நேரில் சந்திப்பார் என ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாயா பிக் பாஸ் வீட்டில் நடந்ததற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் ட்வீட்டுகளை அள்ளி தெளித்துக் கொண்டு இருக்கிறார்.

அர்ச்சனா எதில் சிக்குவார் வெளியே தள்ளிவிடலாம் என்று மாயா ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனபோது மாயாவின் முகத்தில் ஈ ஆடவில்லை. ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அர்ச்சனாவுக்கு வாழ்த்துக்கள் சொன்னதோடு, உனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கண்டிப்பாக நான் வந்து உன்னை பார்ப்பேன் என ஒரு ட்வீட் செய்து இருந்தார்.

Also Read:பிக் பாஸ் சீசன் 7ல் நடந்த எதிர்பாராத 5 நிகழ்வுகள்.. மொத்த சீசனையும் புரட்டி போட்ட அந்த தருணம்

பிக் பாஸ் வீட்டில் எல்லோரிடமும் நட்பாக பழகியது போல் காட்டிக்கொண்ட மாயா, நேற்றைய ட்வீட் ஒன்றில், தன்னுடைய புள்ளி கேங் மொத்தத்தையும் டேக் செய்து நீ செய்த நட்பெல்லாம் நான் செய்த அன்பின் பலன் என உலகநாயகன் கமலஹாசனின் கவிதையை வைத்து உருட்டி இருந்தார். ஆனால் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியும் அவர் டேக் செய்த அத்தனை பேருமே அவருடைய திட்டத்திற்கு பலிக்கிடா ஆனவர்கள் தான் என.

அன்பு கட்டளை இட்ட மாயா

இந்த ட்வீட்டை தொடர்ந்து தன்னுடைய ஆஸ்தான ஸ்குவாடு உறுப்பினர்களுக்கு ஒரு ட்வீட் மூலம் அன்பு கட்டளை போட்டிருக்கிறார். அதில் நீங்கள் என் மீது காட்டிய அன்புக்கு நன்றி, எனக்காக வெளியில் இருந்து போராடி இருக்கிறீர்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த 105 நாட்களையும் மரணப்படுக்கையிலும் என்னால் மறக்க முடியாது, உங்களுக்காக மட்டும் தான் இனிமேல் வேலை செய்யப் போகிறேன்.

நீங்கள் என்னுடைய ரசிகராக இருந்தால் என்னை மட்டும் ரசியுங்கள், மற்றவர்களையும் ரசிங்கள், ஆனால் வேறு ஒருவரை வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களை வெறுக்காதீர்கள், வேண்டுமென்றால் அவர்களை காதலியுங்கள். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், போய் நம்ம வேலையை பார்க்கலாம் என சொல்லி இருக்கிறார். இப்படி பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்திருந்தால் மாயா மக்களிடையே எந்த ஒரு வெறுப்பையும் சம்பாதித்து இருக்க வேண்டாம்.

maya tweet
maya tweet

Also Read:வாழ்க்கை வாடி போற மாதிரி இருந்தா என்ன கூப்பிடு.. அர்ச்சனாவிற்கு திடீர் ட்விட் செய்த மாயா

Trending News