வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித் போல் கோட் சூட் போட்ட பிரபல காமெடி நடிகர்.. நீங்க வேற லெவல்

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் மயில்சாமி. காமெடி நடிகராக மட்டும் அல்லாமல் குணசித்திர வேடங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இவர் சமீபத்தில் வைபவ் நடிப்பில் வெளியான மலேசியா டூ அம்னீசியா படத்தில் நடித்திருந்தார். பொதுவாக பிரபலங்கள் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் போட்டோ ஷூட்டும் அதிகமாக எடுக்க தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் மயில்சாமி, விஜய் நடிப்பில் வெளியான பிகில் ராயப்பன் கதாபாத்திரம் போல் போட்டோ ஷூட் செய்திருந்தார். அந்த புகைப்படம் வைரலானது. அதை தொடர்ந்து தற்போது கோட் சூட் அணிந்து கையில் குடையுடன் கெத்தாக போட்டோ ஷூட் செய்துள்ளார்.

mayilsamy
mayilsamy

ஹீரோக்களை போலவே காமெடி நடிகர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் 90 களில் தொடங்கி தற்போது வரை தனது நடிப்பால் மக்களை மகிழ்வித்து வரும் மயில்சாமி குறிப்பிட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது கோட் சூட்டில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் நீங்கள் ஹீரோவாக நடிக்கலாம் என தமிழ் செய்து வருகிறார்கள்.

Trending News