ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய் டிவி சீரியலில் கலக்கி வரும் மயில்சாமியின் மகன்.. 100 எபிசோடு கிட்ட நெருங்கிய முத்துப்பாண்டி

Vijay Tv Serial: சின்னத்திரை பொருத்தவரை எந்த ஒரு கேரக்டராக இருந்தாலும் சீரியல்களில் நடித்தால் ஓரளவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதிலும் விஜய் டிவி சீரியலில் நடித்து விட்டால் அவர்களை மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்துவிடும். அப்படித்தான் விஜய் டிவி சீரியலில் மயில்சாமியின் மகன் கதாநாயகனாக கலக்கி வருகிறார்.

மயில்சாமி காமெடி கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்து அவருக்கென்று சினிமாவில் ஒரு முத்திரையை பதித்து விட்டார். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் அளவிற்கு பெரிய துக்கத்தை ஏற்படுத்தி விட்டது. ஏனென்றால் அந்த அளவிற்கு மயில்சாமியின் தனிப்பட்ட குணங்கள் இப்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது.

கிராமத்தில் லுக்கில் கலக்கி வரும் மயில்சாமி மகன்

அப்படிப்பட்ட இவருடைய மகன் சின்னத்திரை மூலமாக சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் ஆரம்பித்த தங்கமகள் சீரியல் கிட்டத்தட்ட 100 எபிசோடுகளை தொட போகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் முத்துப்பாண்டியாக நடித்து வரும் யுவன் மயில்சாமி தான் மயில்சாமியின் இரண்டாவது மகன்.

இந்த நாடகம் தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் ஒரு கிராமத்து லுக்கில் எதார்த்தமான நடிப்பை கொடுக்கும் முத்துப்பாண்டி கேரக்டர் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டது. தொடர்ந்து இந்த நாடகத்தின் மூலம் அவருடைய திறமையை வெளிக்காட்டி அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்று வெள்ளித்திரையிலும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஹாசினி என்ற அஞ்சலி தெரியாமல் செய்த ஒரு விபத்து காரணமாக பாவமன்னிப்பு கேட்பதற்கு முத்துப்பாண்டி வீட்டில் இருக்கும் அக்கா வீட்டிற்கு அஞ்சலி வேலைக்காரி போல் நடித்து வருகிறார். அப்படி நடிக்க வந்த அஞ்சலி மீது தீராத காதல் கொண்டு முத்து பாண்டி கல்யாணம் பண்ண நினைக்கிறார்.

ஆனால் பணக்கார வீட்டு பெண்ணாகவும், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் விதமாகத்தான் அஞ்சலி வந்திருப்பதால் முத்துப்பாண்டியன் காதலை ஏற்க மறுக்கிறார். இதற்கிடையில் முத்துப்பாண்டியை அக்கா மகள் காதலிக்கிறார் என்று தெரிந்த நிலையில் இவர்கள் காதலை சேர்த்து வைக்கும் பொறுப்பை அஞ்சலி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் யாருடைய காதல் வெற்றி பெறுகிறது, முத்துப்பாண்டியன் அக்கா மகள்கள் அஞ்சலி செய்ததை மன்னிப்பார்களா என்பதை நோக்கி கதை விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு வருகிறது.

சீரியலில் பட்டையை கிளப்பும் விஜய் டிவி

Trending News