புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து உயிரை விட்ட மயில்சாமி.. கடைசியில் பார்க்க முடியாமல் போன பரிதாப நிலை.!

சினிமாவில் காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து தனது காமெடி மற்றும் மிமிக்கிரி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் மயில்சாமி. இவர் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று உயிரிழந்தார். ஆனால் இவர் சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்தார். அதில் சலிப்பு தட்டவே ஒரு முறையாவது இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு தான் சாகவேண்டும் என்று நினைத்த அவரது எண்ணத்தின் படியே தற்பொழுது நடந்துள்ளது.

ஆரம்ப காலகட்டத்தில் சிறு வேடங்களில் நடித்து காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக இடம்பிடித்த இவர் தாவணி கனவுகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். ஆனால் இவர் நடிக்கும் அனைத்து படங்களிலுமே குடிகார கதாபாத்திரமே இவருக்கு அமைந்துள்ளது.

Also Read: விவேக், மயில்சாமி சேர்ந்து அடித்த லூட்டிகள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த 5 படங்கள்

இதனைத் தொடர்ந்து ஒரு படத்தில் ஆவது குடிக்காமல் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு சந்தோஷமாக செத்து விட வேண்டும் என்று கூறியிருந்தார். தற்பொழுது அதற்கு ஏற்றார் போலவே அமைந்த திரைப்படம் தான் கிளாஸ்மேட். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்பொழுது படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த இவர் காலையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் விவேக் உடன் இணைந்து இவர் அடித்த லூட்டிகள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதிலும் 2003 ஆம் ஆண்டு வெளியான தூள் படத்தில் விவேக், மயில்சாமி நடித்துள்ள காட்சிகள் மீம்ஸ் வடிவில் இன்றளவும் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த அளவிற்கு இவரின் நடிப்பானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்றே சொல்லலாம்.

Also Read: மயில்சாமி நடித்த ரஜினியின் 2 படங்கள்.. கடைசி வரை நிறைவேறாமல் போன மற்றுமொரு ஆசை

மேலும் இவரது ஆசைப்படியே கடைசியாக நடித்த படத்தில் குடிக்காமல் இருக்கும் ஒரு நல்ல கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால் விதி யாரை விட்டது என்பது போல் அவர் வாயால் பேசிய அந்த எண்ணமே தற்பொழுது நடந்துள்ளது. இவரின் இழப்பானது திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு திறமையான ஒரு கலைஞரை தமிழ் சினிமா இழந்துள்ளது.

அதிலும் இவரது நண்பர்கள் இவர் ஆசைப்படியே ஒரு படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து விட்டார் என்று கூறி வருகின்றனர். ஆனால் ஒரு வேலை இந்த படத்தில் இவர் நடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் உயிருடன் இருந்திருப்பார் என்று வருத்தப்பட்டு பேசி வருகின்றனர். அதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் இவர் நல்ல கதாபாத்திரத்தில் நடித்த படத்தை  ஒருமுறை கூட பார்க்க முடியாமல் போனதே  ஆகும்.

Also Read: மயில்சாமி காமெடியில் கலக்கிய 6 படங்கள்.. வாட்ச்மேன் நாராயணனை மறக்க முடியுமா!

Trending News