வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மயில்சாமியின் கடைசி ஆசை நிறைவேற்றப்படும்.. இறுதி அஞ்சலியில் ரஜினி கொடுத்த வாக்குறுதி

கடந்த சில மாதங்களாக சினிமாவில் முக்கிய பிரபலங்களின் இறப்பு ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அந்த வகையில் நேற்று குணச்சித்திர நடிகரான மயில்சாமியின் இறப்பு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி தீவிர சிவன் பக்தனான மயில்சாமி சிவராத்திரி அன்று இறந்தது சாதாரணமாக நடந்தது இல்லை என்று அவரது ரசிகர்களால் கருத்தப்படுகிறது.

இந்நிலையில் மயில்சாமி தன்னுடைய இறுதி நிமிடங்களில் நிறைவேறாத ஆசையை ட்ரம்ஸ் மணி உடன் சிவன் கோயிலில் பேசி உள்ளார். அதாவது ஒவ்வொரு சிவராத்திரிக்கும் சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவாராம். அந்த வகையில் இந்த ஆண்டும் சிவராத்திரி அன்று சிவன் கோயிலில் தரிசனம் பெற்றுள்ளார்.

Also Read : மயில்சாமி காமெடியில் கலக்கிய 6 படங்கள்.. வாட்ச்மேன் நாராயணனை மறக்க முடியுமா!

இந்தக் கோயிலுக்கு கலைவாணன் விவேக் சாரை அழைத்து வந்து சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய வைத்துள்ளேன். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரையும் அழைத்து வந்து சிவனுக்கு பால் அபிஷேகம் செய்வதை என் கண்ணால் பார்க்க வேண்டும் என்று டிரம்ஸ் மணியிடம் மயில்சாமி கூறியுள்ளார்.

இதை மயில்சாமியின் இறுதி அஞ்சலி செலுத்து வரும்போது டிரம்ஸ் மணி கூறியிருந்தார். இந்நிலையில் ரஜினி இன்று மயில்சாமியின் பூத உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்திருந்தார். அப்போது பேசிய சூப்பர் ஸ்டார் மயில்சாமி உடன் அதிக படங்கள் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை.

Also Read : சிவராத்திரி அன்று சிவனிடம் சென்ற மயில்சாமி.. கடைசி நிமிடங்களில் பேசிய நிறைவேறாத ஆசை

ஆனால் நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளும் போது நான் சினிமாவை பற்றி பேசினாலும் மயில்சாமி எம்ஜிஆர் மற்றும் சிவபெருமானை பற்றி தான் அதிகம் பேசுவார். ஏனென்றால் மயில்சாமி எம்ஜிஆரின் தீவிர ரசிகர், அதைவிட சிவனின் பக்தர். கார்த்திகை தீபமன்று எப்போதுமே திருவண்ணாமலைக்கு மயில்சாமி சென்று விடுவார்.

ஒரு ஹீரோவின் படம் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக் கொண்டிருப்பது போல திருவண்ணாமலையில் அன்று கூட்டம் இருந்தால் அவ்வளவு மகிழ்ச்சி அடைவார் மயில்சாமி. உடனே எனக்கு போன் செய்தும் இந்த விஷயத்தை சொல்லுவார். ஆனால் கடந்த திருவண்ணாமலை தீபம் அன்று நான் படப்பிடிப்பில் இருந்ததால் அவரது போனை என்னால் எடுக்க முடியவில்லை என்று சூப்பர் ஸ்டார் கூறியிருந்தார்.

மேலும் டிரம்ஸ் மணியிடம் கேட்டு மயில்சாமியின் கடைசி ஆசையான சிவபெருமானுக்கு தனது கைகளால் பால் அபிஷேகம் செய்வேன் என்று சூப்பர் ஸ்டார் வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் விவேக் மற்றும் மயில்சாமி போன்றோரின் இழப்பு சினிமாவை தாண்டி சமூகத்திற்கும் பேரிழப்பு என்று சூப்பர் ஸ்டார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Also Read : பையன் ஒரு மாதிரி, அவன் கூட தங்க வேண்டாம்.. மகளை கூப்பிட்டு கண்டித்த ரஜினி

Trending News