வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

100 வருஷம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்.. இறப்பதற்கு முன் மயில்சாமியின் உருக்கமான பேச்சு

நடிகர் மயில்சாமியின் இறப்பு சினிமா துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பல பிரபலங்கள் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவருடைய நல்ல பண்பினை செய்தியாளர் சந்திப்பில் பேசிவிட்டு சென்றுள்ளனர். இன்று அவர் நம்முடன் இல்லை என்றாலும் படங்களில் அவருடைய கதாபாத்திரம் மற்றும் மேடை பேச்சுகளில் அவருடைய சொற்பொழிவு நம்மை சுற்றி உள்ளது.

பொதுவாக மயில்சாமி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட விஷயங்களை தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மக்களுக்கு போதித்து விடுவார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர் பல மேடைகளில் அவரைப் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். எம்ஜிஆர் இறந்து பல வருடங்கள் ஆகியும் இன்னும் மக்கள் மனதில் வாழ காரணம் அவர் செய்த தானம், தர்மம் தான் காரணம் என்று மயில்சாமி கூறியுள்ளார்.

Also Read : ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து உயிரை விட்ட மயில்சாமி.. கடைசியில் பார்க்க முடியாமல் போன பரிதாப நிலை.!

அதாவது எவ்வளவு பணம் வைத்திருக்கிறோம் என்பது முக்கியமில்லை. நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவுவது தான் நாம் இறந்த பின்பும் நம்மைப் பற்றி பேச வைக்கும். யாருக்கும் கொடுக்காமல் தான் மட்டும் சொத்துக்களை சேர்க்க வேண்டும் என 100 வயதை தாண்டி வாழ்ந்தாலும் பிரயோஜனம் இல்லை.

சில காலம் மட்டுமே வாழ்ந்தாலும் பிறருக்கு உதவி செய்து அந்த சந்தோஷத்தில் இறப்பது மிகப்பெரிய பாக்கியம் என மயில்சாமி பேசியுள்ளார். மேலும் ஏற்கனவே அவருக்கு ஒரு முறை நெஞ்சுவலி வந்ததாகவும் அப்போது மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று தன்னை காப்பாற்றியதாகவும் மயில்சாமி கூறியிருந்தார்.

Also Read : யாருக்கும் தெரியாத மயில்சாமியின் மறுபக்கம்.. மனதை கனக்க வைக்கும் 8 அதிசய குணங்கள்

அப்போது வண்டியை ஓட்டிய டிரைவர் கிறிஸ்டின் மற்றும் என்னுடன் இருந்தவர் முஸ்லிம். அதனால் தான் நான் ஜாதியை எப்போதுமே பார்ப்பதில்லை என்றும் இந்த உயிர் எந்த நிமிடம் போகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. பிறந்த தேதி, கல்யாண தேதி என அனைத்தும் நம்மால் நம்மால் சொல்ல முடியும்.

ஆனால் நாம் இறக்கும் தேதியை மட்டும் சொல்ல முடியாது. ஆகையால் இருக்கும்போதே ஜாதி பார்க்காமல் அடுத்தவர்களுக்கு தன்னால் முடிந்த வரை தானம் செய்ய வேண்டும் என தனது ரசிகர்களுக்கு மயில்சாமி அறிவுரை கூறியிருந்தார். அதன் விளைவாக தான் என்று அவரது இறப்புக்கு லட்சக்கணக்கானோர் கண்ணீர் விடுகிறார்கள்.

Also Read : விவேக், மயில்சாமி சேர்ந்து அடித்த லூட்டிகள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த 5 படங்கள்

Trending News