புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாக்யாவிற்காக ராதிகாவிற்கு எதிராக திரும்பும் மயூ.. பேத்தியை மிரட்டும் கமலா, ஏற்பட போகும் ட்விஸ்ட்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா மற்றும் அவருடைய அம்மா, ஈஸ்வரிக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்லிட்டார்கள். இதனால் ஈஸ்வரி ஜெயிலுக்குப் போகும் நிலைமை வந்துவிட்டது. ஆனால் எப்படியாவது மாமியாரை வெளியே கொண்டு வர வேண்டும் என்று பாக்கியா முயற்சி எடுத்து வருகிறார். அந்த நேரத்தில் ராதிகா, வீட்டிற்கு வராததால் ஸ்கூல் போயிட்டு வந்த மயூ வீட்டு வாசலிலேயே நிற்கிறார்.

அந்த பக்கமாக வந்த பாக்கியா, மயூவை பார்த்து பேசுகிறார். என்கூட வீட்டுக்கு வருகிறாயா, அம்மா வரும் வரை என்று கூப்பிடுகிறார். ஆனால் மயூ வேண்டாம் என்று சொல்லிய நிலையில் பக்கத்து வீட்டில் நான் பார்க்கில் இருக்கிறேன் அம்மா வந்தா சொல்லிடுங்கள் என்று சொல்லி பார்க்குக்கு போய் உட்கார்ந்து இருக்கிறார். உடனே பாக்யா, மயூ தனியாக இருப்பாள் என்று ஸ்நாக்ஸ் எடுத்துக்கிட்டு போகிறார்.

பாக்யாவிற்கு தெரிந்த உண்மை

அப்பொழுது பாக்யா மற்றும் மயூ பேசிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் ஏகப்பட்ட பிரச்சினை இருப்பதாக மயூ சொல்கிறார். அதற்கு பாக்கியா ஆறுதலாக பேசி படிப்பில் கவனம் செலுத்து என்று சொல்கிறார். உடனே மயூ, பாக்யாவிடம் அம்மா கீழே விழுந்த பொழுது நான் அங்கே தான் இருந்தேன். அவங்களை ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை.

இருவரும் பேசிட்டு இருக்கும்போது அம்மா திரும்பி போகும் போது கீழே விழுந்த பூச்செடியில் கால் மிதித்து வழுகி விழுந்தார்கள் இதை நானும் பார்த்தேன். என்னுடைய பாட்டிக்கும் நன்றாகவே தெரியும். ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை என்று தெள்ளத் தெளிவாக நடந்த விஷயத்தை பாக்யாவிடம் சொல்கிறார். இதை கேட்டதும் பாக்யாவிற்கு சந்தோசம் ஏற்பட்டு மாமியாரை வெளியே கூட்டிட்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

அந்த நேரத்தில் ராதிகா மற்றும் அவருடைய அம்மா பார்க்குக்கு வந்து, மயூவை திட்டுகிறார்கள். நீ ஏன் பாக்யாவிடம் பேசுகிறாய் என்று, பிறகு பாக்யாவையும் திட்டுகிறார்கள். உடனே இதை எப்படியாவது லாயரிடம் சொல்லி மாமியாரை வெளியே எடுக்க வேண்டும் என்று பழனிச்சாமிடம் நடந்த உண்மைகளை கூறுகிறார். அடுத்து பழனிச்சாமி மற்றும் பாக்யா சேர்ந்து லாயரை பார்த்து மயு சொன்னதை சொல்கிறார்கள்.

உடனே லாயர் இந்த ஒரு விஷயம் போதும், எப்படியாவது மயூ மட்டும் வந்து கோர்ட்டில் உண்மையை சொல்லிவிட்டால் உங்க மாமியார் ஈசியாக வெளியே கொண்டு வந்துவிடலாம் என்று சொல்கிறார். ஆனால் இங்குதான் ஒரு செக் இருக்கிறது. எப்படியும் மயூக்கு உண்மை தெரியும் என்று ராதிகாவின் அம்மாவுக்கும் தெரியும். அதனால் கோர்ட்டில் எந்த காரணத்தை கொண்டும் உண்மையை சொல்லக்கூடாது என்று மிரட்டுவார்.

இதனால் பயந்து போன மயூ என்ன பண்ணுவது என்று தெரியாமல் நிற்கப் போகிறார். ஆனாலும் பாக்கியாவிற்காக மயூ துணிஞ்சு கோர்ட்டில் உண்மையை சொல்லி ராதிகாவுக்கு எதிராக நிற்கப் போகிறார். கடைசியில் ஈஸ்வரி மீது எந்த தவறும் இல்லை என்று கோர்ட் மூலம் தெரியவரப்போகிறது. அத்துடன் இவ்வளவு பெரிய மன உளைச்சலுக்கு காரணமான ராதிகாவின் அம்மாவுக்கு வார்னிங் கொடுத்து இந்த கேசை முடிக்க போகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News