வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விடாமுயற்சி வில்லனை உறுதி செய்த மகிழ்த்திருமேனி.. அவரே வெளியிட்ட பரபரப்பான பதிவு

அஜித்தின் துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருடைய அடுத்த படத்தை எப்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவருடைய பிறந்தநாள் அன்று இன்ப அதிர்ச்சியாக டைட்டிலை உறுதிப்படுத்தி விட்டார். அதாவது ஏகே 62 படத்தை இயக்குவது யார் என்ற பெரிய குழப்பத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் என்று உறுதியானது.

இந்நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி எந்த விஷயமும் நகராமல் ஒரு தகவலும் வெளிவராமல் ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்தது. பின்பு அவர்களை குஜால் படுத்துவதற்காக அஜித்தின் பிறந்தநாள் அன்று அவருடைய படத்தின் டைட்டிலை விடாமுயற்சி என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் வெளியிட்டார். இதனை அடுத்து தொடர்ந்து ஒவ்வொரு செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

Also read: அஜித் பிறந்தநாளுக்கு வெளிவந்த இரண்டு பிளாக்பஸ்டர் படங்கள்.. புது வில்லன் அவதாரத்தில் போட்ட அஸ்திவாரம்

அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு இயக்குனர், தயாரிப்பாளர் முடிவான நிலையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளரையும் உறுதி செய்யப்பட்டு விட்டது. அதாவது அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல் பட்டி தொட்டி எங்கும் பறந்தது. அதேபோல இந்த படத்திலும் பாடல் எல்லா பக்கமும் பறக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் அனிருத்தை உறுதிப்படுத்தி உள்ளார்.

அடுத்ததாக இந்த படத்திற்கு அஜித்துக்கு இணையாக வில்லன் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பார்க்கும்பொழுது இவர் நடித்தால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்ற எண்ணத்தில் மகிழ் திருமேனி அந்த நடிகரை வில்லனாக இறக்க முடிவு செய்து இருக்கிறார். இவர் ஏற்கனவே அஜித்திற்கு வில்லனாக நடித்து கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் என்ற பெயரை வாங்கியவர் தான்.

Also read: முதல் 5 நாள் படத்திற்கு கூட்டமே இல்ல.. அடுத்த 80 நாட்களுக்கு தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் ஆன அஜித் படம்!

அதனால் இந்த படத்திலும் அஜித்துக்கு ஏற்கனவே விக்டராக நடித்த அருண் விஜய் தான் நடிக்க இருக்கிறார். இதைப் பற்றி அஜித்தின் ரசிகர்கள் அஜித் என்றாலே அவருக்கு வில்லன் அருண் விஜய் தான் என்று அவர்களே ஒரு கணக்கு போட்டு பேசி வந்தனர். இதை தற்போது உறுதி செய்யும் விதமாக அஜித்தின் பிறந்தநாளுக்கு வெளியான விடாமுயற்சி டைட்டில் அன்று அருண் விஜய் அவருடைய ட்விட்டர் பேஜில் உறுதிப்படுத்தி உள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதனால் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கண்டிப்பாக அருண் விஜய் தான் வில்லனாக இருக்கிறார் என்பதை தெரிந்த அஜித்தின் ரசிகர்கள் மிகவும் பரபரப்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இப்படத்திற்கு தொடர்ந்து அடுத்தடுத்த ஒவ்வொரு தகவல்களையும் வெளியிட்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Also read: சிம்புவால் சினிமாவை வெறுத்து ஒதுங்கிய தயாரிப்பாளர் .. அஜித்தின் மீது சுமத்தப்பட்ட வீண் பழி தெரியுமா ?

Trending News