வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பேரன், பேத்தி எடுத்த பின் இப்படியா அசிங்கப்படுத்துவது? சின்மயி கிழித்து தொங்கவிட்ட மூத்த நடிகை

பாடகி சின்மயி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடி பாடகியாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது குரலின் மூலமாக பல பாடல்களை பாடி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன் பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை ME TOO என்ற அமைப்பின் மூலமாக பாடகி சின்மயி முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டு இன்று வரை தீயாய் பரவி வரும் நிலையில், பலரும் சின்மயிக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் வைரமுத்துவிற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

Also Read : தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி.. நயன்தாராக்கு டஃப் கொடுப்பாங்க போல

அந்த வகையில் பழம்பெரும் நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலா, ME TOO என்பது ஒரு கண்றாவியான விஷயம். வைரமுத்து பேரன், பேத்தி எல்லாம் எடுத்து நல்ல ஒரு அந்தஸ்தில் இருக்கும் சமயத்தில் இன்றைக்கு சின்மயி வளர்ந்து, நன்கு சம்பாதித்து அவரை குற்றம்சாட்டுவது சரியானதல்ல.

இதனை அவர்கள் வளருவதற்கு முன்பே ஏன் சொல்ல வில்லை. அப்போது என்றால் அவர்களுக்கு அந்த சமயத்தில் தேவை இருந்தது. அந்த தேவை தற்போது முடிந்தவுடன் எனக்கு மனது அறுக்கிறது, வலிக்கிறது என ME TOO என்ற அமைப்பை பயன்படுத்தி பேசுவது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என வெண்ணிற ஆடை நிர்மலா காட்டமாக தெரிவித்தார்.

Also Read : வைரமுத்துவை விடாமல் துரத்தும் சின்மயி.. அந்த மாதிரி வீடியோ இல்ல, ஆடியோ ஆதாரம் இருக்கு

மேலும் பேசிய அவர், வைரமுத்துவால் துன்புறுத்தப்பட்டதாக சின்மயி தெரிவித்தார், ஏன் வைரமுத்துவுடன் அப்போது அவர்கள் சென்றார்கள். அப்போதே அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இதனை வெளியில் கொண்டு வந்து இருக்கலாம். இதனை ஒருபோதும் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

பாடகி சின்மயி ME TOO அமைப்பினை கையிலெடுத்ததற்குப்பின் பல பிரபலகளும் தங்களுக்கு நடந்த துன்புறுத்தலை சமூக வலைத்தளங்களில் பேசி வருவது தனக்கு சரியானதாக படவில்லை. ME TOO என்பது சுத்த வேஸ்ட் என வெண்ணிற ஆடை நிர்மலா சின்மயியை விளாசினார்.

Also Read : மாமி என கூப்பிட்டாள் மரியாதை கெட்டுவிடும்’ என மீண்டும் இணையத்தில் கடும் வாக்குவாதமிடம் சின்மயி!

Trending News