படம் பார்ப்பவர்களை மிரள வைக்கும் அளவுக்கு ஹாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தி மெக் மிகப்பெரும் வசூல் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான மெக் 2- தி ட்ரென்ஞ்ச் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 4 ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை மிரட்டி இருக்கிறது. அந்த வகையில் அதன் ஆரம்பமே புல்லரிக்க வைக்கும் வகையில் இருக்கிறது. ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு உயிரினம் உலகத்தை ஆண்டு கொண்டிருந்தது என்ற வசனத்தோடு ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது.
அதைத்தொடர்ந்து நிலத்தை ஆட்சி செய்யும் டைனோசரையே தூக்கி சாப்பிடும் கடல் அரக்கனான சுறா என்ட்ரி கொடுக்கும் காட்சி வேற லெவலில் இருக்கிறது. அதற்கேற்றார் போல் பின்னணி இசையும் நடுநடுங்க வைக்கிறது. அந்த வகையில் 3டி முறையில் இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் இப்போதே ஆர்வத்துடன் காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.
மேலும் மனித கால் தடம் படாத ஆழ்கடலில் இருக்கும் சுறா நிலப்பரப்பை நோக்கி வரும் அந்த காட்சியும், அசுர பசியோடு ஒவ்வொருவரையும் வேட்டையாடும் காட்சியும் சிலிர்க்க வைக்கிறது. இப்படியாக நம்மை பயமுறுத்தும் விதமாக இருக்கும் இந்த ட்ரெய்லரில் ஹீரோவின் சாகசமும் அட்டகாசமாக இருக்கிறது.
அதைத்தொடர்ந்து விறுவிறுப்பாக நகரும் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படம் முதல் பாகத்தை விட அதிக வசூல் பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.