Actress Meena: சினிமா விமர்சகர்களை பொறுத்த வரைக்கும் ஒருத்தரை பற்றி பேச ஆரம்பித்தால் அவர்களை மொத்தமாக டேமேஜ் செய்யாமல் விடமாட்டார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் விமர்சனங்களுக்கு செவி கொடுக்காததால் தான் என்னவோ அநியாயத்திற்கும் இவர் மீது எல்லா நெகட்டிவ் விமர்சனங்களும் எழும்.
அதில் முக்கியமான ஒன்று மீனாவுக்கு அப்பாவாக நடித்துவிட்டு அவருடனே ஜோடி போட்டு நடித்து விட்டாரே என்பதுதான். பொண்ணு வயசு இருக்கும் பொன்னுடன் ஜோடி போடுகிறார், பேத்தி வயசு இருக்கும் பெண்ணுடன் ஜோடி போடுகிறார் என குறைகள் ஏராளம்.
அதிலும் தெலுங்கில் கீர்த்தி செட்டி எனக்கு மகளாக நடித்து விட்டதால் தமிழில் அவர் எனக்கு ஹீரோயினாக நடிக்க கூடாது என ஒரு முறை விஜய் சேதுபதி சொல்லி இருந்தார். அவ்வளவுதான், விஜய் சேதுபதி கிட்ட இருந்து கத்துக்கோங்க, ரஜினி ஆனால் மீனா கூட நடிச்சி இருக்காரே என அந்த சமயத்திலும் ரஜினியின் மீதான காழ்ப்புணர்ச்சி வெளிவந்தது.
ரஜினி- மீனா நடிப்பில் வெளியான படங்கள்
- எங்கேயோ கேட்ட குரல்
- அன்புள்ள ரஜினிகாந்த்
- எஜமான்
- வீரா
- முத்து
- அண்ணாத்தே
எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற படங்களில் மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்திருப்பார். அதன் பின்னர் வீரா, எஜமான், முத்து போன்ற படங்களில் இருவரும் ஜோடியாக நடித்திருப்பார்கள்.
உண்மையை சொல்லப்போனால் இந்த ஜோடி நடித்த படங்களுக்கு எல்லாம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இன்றுவரை இருக்கிறது. இருந்தாலும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த கதையை இவ்வளவு நாள் ஓட்டி வந்தார்கள்.
கமலுக்கும் மகளாக நடித்திருக்கும் மீனா
ஆனால் சைலன்டாக கமலஹாசன் ஒரு வேலை பார்த்தது யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனது. அதையும் டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் கண்டுபிடித்து இப்போது போட்டு உடைத்து விட்டார்கள். ரஜினி மட்டும் தனக்கு மகளாக நடித்த மீனா கூட ஜோடி போடவில்லை. கமலும் அதே வேலையை தான் செய்திருக்கிறார்.
கமல் நடிப்பில் ஹிந்தியில் யாட்கார் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் மீனா கமலுக்கு மகளாக நடித்திருக்கிறார். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து இருவரும் அவ்வை ஷண்முகையில் ஜோடி போட்டார்கள்.
கமல் – மீனா நடிப்பில் வெளியான படங்கள்
- யாட்கார்
- அவ்வை ஷண்முகி
- தெனாலின்
அதுவும் காதல் காட்சிகள் இந்த படத்தில் ஏராளம். கமலுடன் லிப் லாக் சீனில் நடிக்க மாட்டேன் என மீனா கதறி அழுததெல்லாம் தனி ஒரு சம்பவம். உண்மை தெரியாமல் ரஜினி மட்டும்தான் இதையெல்லாம் செய்தார் என பேசிக்கொண்டு இருக்கும் விமர்சகர்களுக்கு தற்போது கமலும் கையில் சிக்கிவிட்டார்.
சர்ச்சைகளில் சிக்கிய மீனா
- காதல் முதல் கல்யாணம் வரை மீனாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 4 ஹீரோக்கள்
- ரெண்டு மணி நேரத்திற்கு 13 லட்சம் கேட்ட மீனா
- 60 வயது ஆனாலும் பரவாயில்ல என மீனா ஜோடி போட்ட 6 நடிகர்கள்