புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தொட நடுங்கியை கண்மூடித்தனமாக நம்பும் மீனா.. மூர்த்தியிடம் தைரியம் இல்லாமல் காதலை மறைக்கும் செந்தில்

Pandian Stores Season 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 அப்பா மகன்களின் பாசத்தை வைத்து எடுக்கப்பட்டு வருவதால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதே நேரத்தில் எதற்கெடுத்தாலும் மூர்த்தி சண்டை போட்டு ஓவராக குரலை ஒசத்தி பேசுவது, மகன்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் ஹிட்லர் மாதிரி நடந்து கொள்வது கொஞ்சம் எரிச்சல் அடைய வைக்கிறது.

முக்கியமாக மனைவியின் அண்ணன்களுடன் மல்லுக்கட்டி சண்டை போடுவது லாஜிக்கே இல்லாத அளவிற்கு இருக்கிறது. அதாவது கோமதியின் அண்ணன்கள் கோபப்படுவது சண்டை போடுவது நியாயமான விஷயம். ஆசை ஆசையாக வளர்த்த தங்கை வீட்டிற்கு சொல்லாமல் கல்யாணம் பண்ணிவிட்ட காரணத்திற்காக அவர்கள் அப்படி இருக்கிறார்கள்.

இதில் மூர்த்தி ஏன் வீம்பு பிடிக்கிறார் என்பதுதான் குளறுபடியாக இருக்கிறது. அதிலும் மகன்களிடம் ஹிட்லர் மாறி நடந்து கொண்டு அவர்களுடைய ஆசைக்கு குறுக்கே நிற்பது எந்த விதத்தில் சரியான அப்பாவாக இருக்க முடியும். அப்படித்தான் மூத்த மகனின் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு சரவணனை காயப்படுத்தி விட்டார். அவரும் அப்பா என்ன செஞ்சாலும் நல்லதுக்காகத்தான் இருக்கும் என்று வாயை மூடிக்கொண்டு தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்.

Also read: அப்பத்தாவின் கனவை நிறைவேற்ற போகும் மருமகள்கள்.. பின்னணியில் இருக்கும் ஜீவானந்தத்தின் சூழ்ச்சி

இதுல வேற இரண்டாவது மகன் செந்தில் யாருக்கும் தெரியாமல் மீனாவை காதலித்து வருகிறார். கொஞ்சம் கூட அப்பாவிடம் பேச தைரியம் இல்லாத இவர் எப்படி மீனாவை காதலிக்கும் விஷயத்தை சொல்லப் போகிறாரோ. இந்த சூழலில் மீனா வீட்டின் குடும்பத்தை தற்போது காட்டுகிறார்கள். அதில் மீனாவின் அப்பா அம்மாவாக பாண்டியன் ஸ்டோர் சீசன் 1ல் நடித்த ஜனார்தன் மற்றும் அவருடைய மனைவியை அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதனால் பார்ப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக செட்டாக மாதிரி ஒரு பீல் கொடுக்கிறது.
இதனைத் தொடர்ந்து மீனாவிற்கு ஜனார்த்தன் வீட்டில் பொண்ணு பார்க்கும் சம்பவம் நடக்கிறது. இதை கேள்விப்பட்ட மீனா, செந்திலிடம் எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். இன்று என்னை பெண் பார்க்க வருகிறார்கள். அதனால் நான் எப்படியும் அந்த நேரத்திற்கு போகாமல் தப்பித்துக் கொள்கிறேன்.

அத்துடன் இன்றைக்கு உன்னுடைய வீட்டில் நம்முடைய காதல் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்கி என்னை முறைப்படி பொண்ணு கேட்க வர சொல்லி என்று கூறுகிறார். இதைக் கேட்ட செந்தில் தொட நடுங்கியாக முழித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் காதல் எப்படி கல்யாணத்தில் முடிகிறது என்பதுதான் தற்போது உள்ள கதையாக அமையப் போகிறது.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் ஹீரோயினான கதாநாயகி ஷோ புகழ் நடிகை.. கண்ணுக்குழி அழகிக்கு அடித்த ஜாக்பாட் 

Trending News