செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவை கிழித்து தொங்கவிட்ட மருமகள்.. ஊருக்கே விருந்து வைத்த ஜீவா

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அனைவரும் குதுகலமாக இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கதிர் மற்றும் முல்லைக்கு பெண் குழந்தை பிறந்தது தான். அவர்கள் படும் சந்தோஷத்தை பார்த்து குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் மீனாவின் கேரக்டர் நெகட்டிவ் ஆக வந்திருந்தாலும் போகப்போக கதைக்கு ஏற்ற மாதிரி இவருடைய குணாதிசயங்கள் மாறி அனைவரும் ரசிக்கும்படியாக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவருடைய கேரக்டரை பார்க்கும் பொழுது இந்த அளவுக்கு நல்லவராக இருக்க முடியுமா என்று மெய்சிலிர்க்கும் படியாக அமைகிறது.

Also read: என் பொண்டாட்டி எனக்கு மட்டும்தான்.. சந்தோஷத்தில் துள்ளித் திரியும் கோபி

அதாவது ஜீவா, கதிருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் அனைவருக்கும் சாப்பாடு போடுவதாக வேண்டி இருந்தார். இதை செய்யும் பொருட்டில் ஜீவாக்கு உதவியாக மீனா அனைத்து விஷயங்களையும் சந்தோசமாக செய்து வருகிறார். அத்துடன் இதற்கு பதிலாக 100 பேருக்கு சாப்பாடு போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்.

இதையெல்லாம் பார்த்த மீனாவின் அப்பா ரொம்பவே கடுப்பாகி இதெல்லாம் யாரு அப்பா வீட்டு காசு இஷ்டத்துக்கு அவங்க அண்ணன் தம்பிக்கு செலவு பண்றதுக்கு நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார். இதை கேட்ட மீனா நல்லா நாலு கேள்வி நச்சுன்னு அவங்க அப்பாவிற்கு பதிலளிக்கிறார்.

Also read: குணசேகரனை மிரட்டும் ஜான்சி ராணி.. கரிகாலன் காதலை ஊத்தி மூடிய ஜனனி

அதாவது 100 பேருக்கு தக்காளி சாதம் போடுவதற்கு குறைந்தது 5000 ரூபாய் ஆகியிருக்குமா. அதற்கு இந்த பேச்செல்லாம் பேசணுமா என்று கேட்க, அத்துடன் அவர் ஒன்னும் சும்மா உங்க காசு எடுக்கலையே. காலையில் 7 மணியிலிருந்து 9 மணி வரை இந்த குடும்பத்துக்காக உழைக்கிறார். அதுக்கெல்லாம் நீங்க என்ன சம்பளமா கொடுக்குறீங்க. பிறகு ஏன் செலவு பண்ணா மட்டும் இப்படி எல்லாம் பேசுறீங்க என்று கேட்கிறார்.

மேலும் அவருக்கு என்ன செலவு இருக்கு என்ன தேவைப்படும் என்றெல்லாம் நீங்க யோசிக்க மாட்டீங்க. அதை விட்டு செயின், பைக்கு, கார் என்று சும்மா பந்தாக்கு எல்லாத்தையும் வாங்கி கொடுத்து ஷோ வா காட்டுறீங்க என்று நச்சுன்னு கேள்வி கேட்கிறார். இந்த மாதிரி மீனாவை பார்க்கும் போது இவரை மாதிரி ஒரு மனைவி எல்லார் குடும்பத்திற்கும் அமைந்தால் குடும்பமே சொர்க்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Also read: உச்சகட்ட அவமானத்தால் தற்கொலை முயற்சியில் குணசேகரன்.. டபுளா யோசிச்சு ஜனனி வச்சா பாரு ஆப்பு

Trending News