புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சினிமாவில் ஜெயித்ததற்கு இவர் தான் காரணம்.. விஸ்வாசத்தை காட்டும் மீனா

தமிழ்சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம்தான் மீனா அறிமுகமாகியுள்ளார்.

மீனா சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு காரணம் சிவாஜிகணேசன் என்று அவரே ஒருமுறை கூறியுள்ளார். அதாவது விழா ஒன்றிற்கு செல்லும்போது என்னை பார்த்துவிட்டு இந்த குழந்தையை நடிக்க வைக்கலாம் என சிவாஜி கணேசன் கூறியுள்ளார். அதன் பிறகுதான் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்ததாக மீனா தெரிவித்துள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான எஜமான், வீரா, நாட்டாமை மற்றும் அவ்வை சண்முகி போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அதன் பிறகு தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்த மீனா தெறி படத்தின் மூலம் தனது மகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

meena
meena

எப்படி சிவாஜி கணேசன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகினார். அதேபோல் விஜய் மூலம் அவரது மகள் நைனிகா பிரபலமானார். இவர்கள் இருவருமே பெரிய நடிகரின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் மீனா நடித்துள்ளார்.

இப்படத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டபோது. சினிமாவில் நீங்கள் நிலைத்து நிற்பதற்கு யார் காரணம் என கேட்டுள்ளனர். அதற்கு மீனா நான் சினிமாவில் வெற்றி பெறுவதற்கு காரணம் என்னுடைய அம்மா என கூறியுள்ளார். மேலும் அவருடைய ஆதரவால் தான் சினிமாவில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் தன்னுடைய நடிப்பையும், ஈடுபாடும் குறித்தும் இதுவரை யாரும் குறை சொல்லியதே கிடையாது. இதற்கு காரணம் அம்மா தான் அவர்கள் தான் எல்லாத்தையும் சரி பார்த்து எனக்கு நல்ல பெயரையும் சினிமாவில் வெற்றியும் வாங்கிக் கொடுத்தார் என கூறியுள்ளார்.

Trending News