Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் பார்த்த பெண் பழனிவேலுக்கு பிடித்துப் போய்விட்டது. அதே மாதிரி அந்த பெண்ணுக்கும் பழனிவேலுவை பிடித்து விட்டது. அதனால் இவர்களுடைய கல்யாணத்தை விரைவில் நடத்தலாம் என்று வருகிற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்கள்.
அத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்த உடன் கல்யாணத்திற்கும் நாள் குறிப்பதற்கு முடிவு பண்ணி விட்டார்கள். இந்த சந்தோஷத்துடன் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் வீட்டுக்கு வந்து விட்டார்கள். பிறகு வாசலில் நின்று தகவலை மச்சான்களுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக பாண்டியன், பழனிவேலுக்கு நல்லபடியாக பொண்ணு அமைந்து விட்டது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம், அதே மாதிரி நிச்சயதார்த்தம் முடிந்த கையுடன் கல்யாணத்துக்கும் நாள் குறித்து விடுவோம். யார் வேண்டுமானாலும் கல்யாணத்துக்கும் நிச்சயதார்த்தத்திற்கும் வரலாம், ஆனால் பழனிவேலு விஷயத்தில் என்னைத் தவிர வேறு யாருக்கும் முடிவெடுக்கும் உரிமை இல்லை என்று சந்தோஷத்தில் மச்சான்களை வம்புக்கு இழுக்கும் விதமாக வாசலில் நின்று கத்தி விட்டார்.
இதனைத் தொடர்ந்து பெரிய பிரச்சினை ஆகி விடக்கூடாது என்பதற்காக பாண்டியனை கோமதி உள்ளே கூட்டி போய்விட்டார். ஆனாலும் இந்த பாண்டியன் எதற்கு நம்ம தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று முத்துவேல் மற்றும் சக்திவேல் புலம்புகிறார்கள். அத்துடன் சக்திவேல், பாண்டியனை அவமானப்படுத்தும் விதமாக இந்த கல்யாணத்தில் குளறுபடி பண்ணுவதற்கு பல தடைகளை பண்ண வாய்ப்பு இருக்கிறது.
அடுத்ததாக ராஜி மீனா இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ராஜி, போலீஸ் ஆவதற்கு ட்ரெயினிங் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக தான் கதிர் காலையில் என்னை ஓட வைப்பதற்கு கூட்டிட்டு போகிறார். வீட்டில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாது என்று சொல்லிய நிலையில் கதிரை பற்றி ஓவராக பெருமை பேச ஆரம்பித்து விட்டார்.
இதைக் கேட்ட மீனா, அதுதான் உன் மனசுல அவன் மீது காதல் வந்துவிட்டது. இந்த காதலை சீக்கிரமாக கதிரிடம் சொல்லிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார். உடனே ராஜி இதற்கு மேலும் உங்க கூட பேசினால் என்னையே குழப்பி விட்டு விடுவீர்கள் என்று வெட்கப்பட்டு உள்ளே போய்விடுகிறார். அதே மாதிரி ராஜி மற்றும் கதிர் மறுநாள் காலையில் மைதானத்திற்கு சென்று ஓடுவதற்கு ட்ரைனிங் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அப்பொழுது இவர்கள் இரண்டு பேரும் சிரித்து மனம் விட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை ராஜியின் அம்மா மற்றும் சித்தி கோயிலுக்கு போயிட்டு வரும் வழியில் பார்த்து ரசிக்கிறார்கள். நம்ம மகள் மனசில் இவ்வளவு பெரிய காதல் இருக்கிறது என்பதை கொஞ்சம் கூட தெரிந்து கொள்ளாமல் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டோம்.
அதனால் தான் வீட்டில் சொல்ல பயந்து போய் ராஜி வீட்டுக்கு தெரியாமல் கதிரை கல்யாணம் பண்ணி இருக்கிறார். எது எப்படியோ ராஜி பிடிச்ச வாழ்க்கையை தேர்ந்தெடுத்து தற்போது கதிருடன் சந்தோஷமாக இருப்பதை நம் கண்குளிர பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள். ஆக மொத்தத்தில் கதிர் மற்றும் ராஜி மனசில் காதல் இருக்கிறது என்றாலும் ஒருவரை ஒருவர் வெளிப்படுத்தாமல் மனசுக்குள்ளே வைத்து இருக்கிறார்கள். கூடிய விரைவில் இவர்கள் இரண்டு பேருமே காதலை சொல்லிவிடுவார்கள்.